இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா தயாரித்து, நடித்து முடித்துள்ள திரைப்படம் 'சூரரைப்போற்று'. தீபாவளியை முன்னிட்டு நாளை ஓடிடி தலத்தில் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தை பிரபலங்கள் சிலர் பார்த்து விட்டு தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.

கொரோனா பிரச்சனையால், முன்னரே வெளியாக இருந்த படங்கள் கூட, தீபாவளி ரிலீசாக மாறியுள்ளது. அந்த வகையில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சூர்யாவின் , 'சூரரை போற்று' திரைப்படமும் ஒன்று இந்தப்படம் ஓடிடி தளத்தில் நவம்பர் 12 ஆம் தேதி அதாவது நாளை வெளியாக உள்ளது.

இந்த படத்தில், ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் வெளியான மாறா, வெய்யோன் சில்லி, ஆகிய பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் ஓரிரு தினங்களுக்கு முன் ’நாலு நிமிஷம்’ என்ற லிரிக் விடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இந்த படத்தை பார்த்து, படம் எப்படி உள்ளது என தெரிவித்துள்ளார் பிரபல இயக்குனர் பாண்டி ராஜ். ’சூரரைப் போற்று’ படத்தை பார்த்தது ஒரு புதிய அனுபவமாக இருந்தது. ஒவ்வொரு கேரக்டரும் இதயத்தை தொடும் வகையில் இருந்தது. சூர்யா மிக அபாரமாக நடித்து உள்ளார். சுதா கொங்கரா அவர்களின் கடுமையான உழைப்பை நான் இந்தப் படத்தில் ஒவ்வொரு பிரேமிலும் பார்த்தேன். ஜீவி பிரகாஷின் இசை இந்த படத்திற்கு மிகப்பெரிய பலம். இந்த தீபாவளிக்கு ஒரு சரியான விஷுவல் ட்ரீட் தான் இந்த வரைபடம். ’சூரரைப் போற்று’ படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.

இந்த படத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, கருணாஸ், ஜாக்கி ஷெரிப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். நிகேஷ் பொம்மிரெட்டி ஒளிப்பதிவில் சதீஷ் சூர்யா படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்தை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் மற்றும் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.