தமிழ் சினிமாவில் தரமான கதைகளை, எதார்த்ததோடு இயக்கி வெற்றி படங்களை கொடுத்துள்ளனர் இயக்குனர் பாண்டிராஜ். தற்போது நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து, 'நம்ம வீட்டு பிள்ளை' படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் கிராமத்து கதையம்சத்தோடு, அண்ணன்-தங்கை பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில், நடிகர் பாண்டியராஜுடன் உதவி இயக்குனராக பணி புரிந்தவர், காயத்திரி கண்ணன். இவருக்கும், நடிகர் ஜெயம் ரவி, மற்றும் காஜல் அகர்வால் நடிப்பில் வெளியாகி, தற்போது வரை திரையரங்கங்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'கோமாளி', உள்ளிட்ட பல படங்களில் படத்தொகுப்பாளராக பணி புரிந்துள்ள பிரதீப் ரங்கநாதன் என்பவருக்கும் இன்று திருமணம் நடைபெற்றுள்ளது.

இவர்களுடைய திருமணத்தில் இரு வீட்டு குடும்ப உறுப்பினர், மற்றும்  நண்பர்கள் என பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். மேலும் சமூக வலைத்தளங்களிலும் இந்த தம்பதிகளுக்கு வாழ்த்து குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.