இந்த படத்தை பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள் ஒரு சில கட்டுகளுடன் படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

கடந்த ஆண்டு மோகன் ஜி. இயக்கத்தில் ரிச்சர்ட், ஷீலா, கருணாஸ், நிஷாந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் 'திரெளபதி’, கூட்டு நிதி முறையில் தயாரிக்கப்பட்டது. தியேட்டர்களில் மட்டுமே 18 நாட்கள் ஓடியுள்ள இந்த படம், தமிழ்நாட்டில் மட்டும் அந்த படம் 14.28 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது. அதுமட்டுமில்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் “தர்பார்” படத்தை விட “திரெளபதி” படத்திற்கு கிடைத்த வரவேற்பு அனைவரையும் வாய் பிளக்க வைத்தது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred


இதையடுத்து இயக்குநர் மோகன்.ஜி அடுத்ததாக ‘ருத்ர தாண்டவம்’ என்ற படத்தை ‘திரெளபதி’ பட நாயகன் ரிச்சர்ட் ரிஷியுடன் இணைந்து இயக்கியுள்ளார். குக் வித் கோமாளி புகழ் தர்ஷா குப்தா இந்த படம் மூலமாக ஹீரோயினாக அறிமுகமாகிறார். இயக்குனர் கவுதம் மேனன், ராதாரவி, மாளவிகா அவினாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து இறுதிக்கட்ட வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

தற்போது அனைத்து பணிகளும் முடிந்து படத்தை சென்சாருக்கு அனுப்பி இருக்கிறார்கள். இந்த படத்தை பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள் ஒரு சில கட்டுகளுடன் படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். விரைவில் படத்தின் டிரைலர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக திரெளபதி படத்திற்கு 14 இடங்களில் சென்சார் போர்டு கட் வைத்தது. அதன் பின்னர் குறிப்பிட்ட கட்சிதலைவரை குறிக்கும் விதமாக வசனங்கள் இருப்பதாகவும் சர்ச்சை எழ, அதையும் கோர்ட் வரை சென்று நீக்க உத்தரவு வாங்கியது குறிப்பிடத்தக்கது.