director misbehaved with actress and police enquired
நடிகையிடம் சில்மிஷமா...இயக்குநருக்கு போலிஸ் காட்டிய சரவெடி...
திரைப்படங்களில் நடிக்கும் நடிகைகளுக்கு பல துன்புறுத்துதல் ஆரம்ப காலகட்டத்தில் இருக்கும் என பலரும் பேசுவதை கேள்விபட்டிருப்போம்.
இது குறித்து பல நேரங்களில் குஷ்பு உள்ளிட்ட பல நடிகைகள் கருத்து தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில், ஹைதராபாத்தில் யோகி என்ற குறும்பட இயக்குனர் மீது நடிகை ஒருவர் புகார் செய்துள்ளார்.
மேலும்,இதுவரை இதற்கு முன்னதாக நடித்த இரண்டு படங்களுக்கான சம்பளமும் கொடுக்காமல் இழுபறியில் விடப்பட்டு உள்ளது.இந்நிலையில்,தனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாகவும் புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அந்த இயக்குநர் மீது,வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, மாதவப்பூர் கூடுதல் காவல்ஆணையாளர்,யோகியிடம் விசாரணை நடத்தும் போது,அவரை எட்டி உதிக்கும் காட்சி தற்போது வெளியாகி உள்ளது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
