Mari Selvaraj Talk about his Missing son in Japan : பேப்பரில் தனது மகன் இயக்குநர் மாரி செல்வராஜின் மகன் என்று எழுதி காட்டியதாக இயக்குநர் மாரி செல்வராஜ் பெருமிதமாக கூறியுள்ளார்.

Mari Selvaraj Talk about his Missing son in Japan : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் மாரி செல்வராஜ். பரியேறும் செல்வராஜ், கர்ணன், மாமன்னன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். கடைசி வாழை படத்தை இயக்கியிருந்தார். வாழை சுமக்கும் தொழிலை மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டிருந்தது. இந்தப் படம் மட்டுமின்றி படத்தில் இடம் பெற்ற காட்சிகளும் ரசிகர்களை வியக்க வைத்தது. இப்போது இவரது இயக்கத்தில் பைசன் படம் உருவாகி வருகிறது. துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், லால், பசுபதி, ரஜிஷா விஜயன் ஆகியோர் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

விளையாட்டு கதையை மையப்படுத்திய இந்தப் படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். வரும் அக்டோபர் 17ஆம் தேதி இந்தப் படம் திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து தனுஷை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் இயக்குநர் ராம் இயக்கத்தில் வெளியாக இருக்கும் பறந்து போ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் மாரி செல்வராஜ் கலந்து கொண்டு பேசினார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ஜப்பானுக்கு சென்ற போது தனக்கும் தனது மகனுக்கும் நடந்த சம்பவங்கள் குறித்து பேசியிருக்கிறார்.

அதில், நானும், ராம் சாரும் இணைந்து ஏராளமான காமெடி படங்கள் பார்த்திருக்கிறோம். களவாணி படத்தை பார்த்துவிட்டு என்னை இது போன்று படம் இயக்க வேண்டும் என்றார். ஈழத் தமிழர் பிரச்சனையின் போது இயக்குநர் ராம் பேசிய விதம் சினிமா மீதான எனது ஆர்வத்தை தூண்டியது. என்னுடைய பிள்ளைகளுக்கும் அவர் தான் பெயர் வைத்தார். எப்படியாது எனக்கு போன் போட்டு மகன் என்ன செய்கிறார்கள் என்றெல்லாம் விசாரிப்பார்.

நான் கொஞ்ச நாட்களுக்கு முன்பு ஜப்பானுக்கு சென்றிருந்தேன். அப்போது மனைவியின் அம்மாவின் அறையில் மகனை தூங்க வைத்துவிட்டு நாங்கள் நண்பர் ஒருவரை சந்திக்க சென்றோம். அதன் பிறகு நாங்கள் திரும்பி வரும் போது மாமியார் போன் செய்து பேரன்களை காணவில்லை என்று கதறி அழுதார்.

எங்களால் நம்பமுடியவில்லை. காரணம், தூங்கிக் கொண்டிருந்தவன் எப்படி காணாமல் போக முடியும், அதுவும் இந்த ஊருக்கு புதுசு வேறு, எங்க போக முடியும், என்றெல்லாம் எங்களுக்குள் கேள்வி எழுகிறது. அவர்களுக்கு வெளியில் சென்று பழக்கமே இல்லை. ஆனால், ஒரு ரூமிற்குள் செல்ல முடியும், அதே போன்று லிஃப்டில் சென்று வர முடியும். சரி என்று என்ன செய்வது என்று தெரியாமல் வேகமாக தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்றோம். அப்போது, வரவேற்பறையில் 2 பெண்களுக்கு நடுவில் அவன் உட்கார்ந்திருந்தான். அவனை தூக்கி கொஞ்சினேன். எப்படி இங்கு வந்த என்று கேட்க, அதற்கு பேம்பர்சை கழற்றிவிட்டு, சட்டை மற்றும் பேண்ட் மட்டும் போட்டு கொண்டு காலில் ஷூ அணிந்து கொண்டு வெளியேறியிருக்கிறான்.

பாட்டி தங்கியிருந்த அறை மற்றும் நாங்கள் தங்கியிருந்த அறை என்று எதையும் அவர்களால் திறக்க முடியவில்லை. பிறகு எல்லா அறை கதவுகளையும் தட்டியிருக்கிறான். அப்போது தான் அங்கு வந்த 2 பெண்கள் அவனிடம் நீ யார் என்று கேட்ட போது அதற்கு பேப்பரி இயக்குநர் மாரி செல்வராஜின் மகன் என்று எழுதி கொடுத்திருக்கிறான்.

இதைத் தொடர்ந்து தான் அவர்கள் அவனை அழைத்துக் கொண்டு வரவேற்பறைக்கு வந்திருக்கிறார்கள். அங்கு வந்து என்னைப் பற்றி விசாரித்திருக்கிறார்கள். நாங்கள் வந்திருப்பதை கன்ஃபார்ம் செய்து கொண்ட அவர்கள் அங்கேயே எங்களுக்காக காத்துக் கொண்டிருந்தார்கள் என்று ராம் சாரிடம் கூறியதாக பகிர்ந்து கொண்டார். அதற்கு இனிமே உன்னுடைய சினிமா மாறி எல்லோர் மீதும் நம்பிக்கை வரும் என்று அவர் குறிப்பிட்டதாக பகிர்ந்து கொண்டுள்ளார்.