தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது தெலுங்கிலும்  நயன்தாராவுக்கு டஃப் கொடுத்தவர் அனுஷ்கா. மனிரத்தினம் இயக்கும் படத்தில் அவர் தமிழில் ரீ எண்ட்ரி கொடுக்க இருப்பதாக சொல்லப்பட்டது. பொன்னியின் செல்வன் படத்தில் அனுஷ்கா உண்டா, இல்லையா? கடைசி வரை நீடித்த குழப்பத்திற்கு இப்போது முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் மணிரத்னம். ஏன் அனுஷ்கா இல்லை? நான்கு கோடி சம்பளம் கேட்டாராம்.

 

அவ்வளவுக்கு வொர்த் இல்ல என்று நினைத்த மணிரத்னம், ஒரு கோடி ப்ளஸ் ஜி.எஸ்.டி என்று தருவதாகக் கூற, பிடித்த பிடியிலேயே இருந்தாராம் அனுஷ். எப்படியோ... அனுஷ்கா இடத்தில் த்ரிஷாவை வைத்து காரியத்தை முடித்து விட்டார் மணி.  த்ரிஷாவுக்கு  நிர்ணயிக்கப்பட்ட சம்பளம், ஒரு கோடி ப்ளஸ் ஜி.எஸ்.டி.  நயன்தாரா ஒருபடத்திற்கு ஆறு கோடி சம்பளம் பெறுகிறார். அனுஷ்கா 4 கோடி கேட்டதற்கே மிரண்டு பின் வாங்கி விட்டார் மணிரத்தினம்.