Maniratnam : தக் லைஃப் படம் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து படத்தின் இயக்குநர் மணிரத்னம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார்.
Maniratnam asking Apologies : தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் இயக்குநர் மணிரத்னம். தமிழில் பகல் நிலவு படம் மூலமாக இயக்குநராக அறிமுகமானார். இதய கோயில், மௌன ராகம், நாயகன் என்று பல படங்களை இயக்கிய மணிரத்னம் கடந்த 2022 ஆம் ஆண்டு தனது கனவு படமான பொன்னியின் செல்வன் 1 படத்தை ஹிட் கொடுத்தார். இந்தப் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு பொன்னியின் செல்வன் 2 படத்தை இயக்கினார். இந்தப் படமும் ஹிட் கொடுத்தது.
இந்த நிலையில் தான் கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, அபிராமி ஆகியோர் பலர் நடிப்பில் வெளியான தக் லைஃப் படத்தை இயக்கியிருந்தார். கிட்டத்தட்ட ரூ.300 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தை கமல் ஹாசன் மற்றும் இயக்குநர் மணி ரத்னம் இணைந்து தயாரித்திருந்தனர். ஏ ஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமத்திருந்தார். படத்திற்கான புரோமோ வேலைகள் பிரமாண்டமாக நடைபெற்றாலும் படம் எதிர்பார்த்த அளவிற்கு ஹிட் கொடுக்கவில்லை.
கடந்த ஜூன் 5ஆம் தேதி வெளியான இந்தப் படம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. பிரம்மாண்டமாக படைப்பாக அதிக எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தப் படம் திரைக்கு வந்தது. இந்த சூழலில் இந்தப் படம் பாதிக்கு பாதி கூட வசூல் குவிக்கவில்லை. ரூ.100 கோடி கூட வசூல் குவிக்கவில்லை.
நாயகன் படத்திற்கு பிறகு கமல் ஹாசன் மற்றும் மணி ரத்னம் இருவரும் 30 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்த படம் என்பதால் அதே போன்ற ஒரு கதையே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படம் வேறு மாதிரியான கதையை மையப்படுத்தி வெளியாக ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. 2025 ஆம் ஆண்டைப் பொறுத்தமட்டில் கதைக்கு மட்டுமே நல்ல வரவேற்பு கொடுக்கப்பட்டு வரப்படுகிறது.
டிராகன், டூரிஸ்ட் ஃபேமிலி ஆகிய படங்களுக்கு ரசிகர்களிடையே அமோக வரவேற்பு கிடைத்த நிலையில் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் தோல்வி படங்களாகவே அமைந்துவிட்டது. பொதுவாக பிரம்மாண்ட இயக்குநர்கள் இளம் இயக்குநர்களிடம் தோல்வி அடைந்து வருகின்றனர். இதற்கு காரணம் படத்தின் கதை என்று சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் தான் தக் லைஃப் தோல்விக்கு இயக்குநர் மணிரத்னம் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார். இந்தப் படம் குறித்து மனம் திறந்து பேசிய அவர், நாயகன் போன்ற ஒரு படத்தை எதிர்பார்த்த உங்களுக்கு அப்படிப்பட்ட ஒரு உணர்வை இந்தப் படம் கொடுக்கவில்லை என்பது நன்றாக புரிகிறது. அதற்காக எங்களை மன்னிக்கவும் என்று கேட்டு கொண்டுள்ளார். பொதுவாக சினிமாவைப் பொறுத்த வரையில் ஒரு படம் தோல்விக்கு எந்த ஒரு இயக்குநரும் பொறுப்பேற்று கொண்டு அதற்கு மன்னிப்பும் கேட்பதில்லை. ஆனால், மணிரத்னம் சற்று வித்தியாசமாகவும், விதிவிலக்காகவும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளார்.
