லியோ படம் அடுத்த வாரம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், படக்குழுவுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்றுள்ளார்.

தமிழ் சினிமாவில் தரமான ஆக்‌ஷன் படங்களை கொடுத்து ரசிகர்களின் மனம் கவர்ந்த இயக்குனராக உருவெடுத்துள்ளார் லோகேஷ் கனகராஜ். மாநகரம் தொடங்கி, கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர்ந்து 4 பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக இயக்கியுள்ள திரைப்படம் தான் லியோ. நடிகர் விஜய் ஹீரோவாக நடித்துள்ள இப்படம் வருகிற அக்டோபர் 19-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

லியோ படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு வாரமே எஞ்சி உள்ளதால் அப்படத்தின் புரமோஷன் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தான் இயக்கிய படங்கள் ரிலீஸ் ஆகும் முன்னர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் கடந்த 2019-ம் ஆண்டு கைதி படம் ரிலீஸ் ஆகும் முன்னர் அவரும் இயக்குனர் ரத்னகுமாரும் சேர்ந்து ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்றனர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இதையடுத்து மாஸ்டர் பட ரிலீசுக்கு முன்னர் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு அனிருத் மற்றும் படக்குழுவுடன் சென்று சாமி தரிசனம் செய்து வந்தார் லோகேஷ். இதன்பின்னர் கடந்தாண்டு கமல்ஹாசனின் விக்ரம் பட வெளியீட்டு முன்னர் தன்னுடைய உதவி இயக்குனர்கள் மற்றும் இயக்குனர் ரத்னகுமார் உடன் ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வந்தார் லோகேஷ். இதுகுறித்த புகைப்படங்களும் வெளியாகின.

Scroll to load tweet…

இந்த நிலையில், லியோ பட ரிலீஸ் நெருங்கி வருவதால், வழக்கம்போல் தன்னுடைய செண்டிமெண்ட்டை கடைபிடித்துள்ள லோகேஷ் தன்னுடைய டீம் உடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பாத யாத்திரை சென்றுள்ளார். லோகேஷ் கனகராஜ் உடன் திருப்பதி மலையேறும் போது கோவிந்தா கோஷமிட்டபடி செல்லும் வீடியோவை இயக்குனர் ரத்னகுமார் பதிவு செய்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... குடும்பத்தின் பாசம்... எமோஷ்னல் டச்..!! மெலடியில் உருக வைக்கும் அன்பெனும் பாடல்! 'லியோ' மூன்றது பாடல் இதோ..