வெள்ள நீர் அகற்றம்... என்ன அழகா வேலை பார்த்திருக்காங்க...! மாநகராட்சி ஊழியர்களை பாராட்டிய லிங்குசாமி
சென்னையில் வெள்ள நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள மாநகராட்சி அதிகாரிகளையும், ஊழியர்களையும் இயக்குனர் லிங்குசாமி பாராட்டி உள்ளார்.
சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் ஏராளமான பகுதிகள் மூழ்கின. இதையடுத்து மழை நின்றதும் வெள்ளநீரை போர்கால அடிப்படையில் விரைந்து அகற்றிய சென்னை மாநகராட்சி ஊழியர்கள், பெரும்பாலான சாலைகளில் தேங்கி இருந்த மழை நீரை அகற்றி போக்குவரத்தை சீர்படுத்தி உள்ளனர். தொடர்ந்து தாழ்வான பகுதிகளில் தேங்கிக் கிடக்கும் தண்ணீரை அகற்றும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் உழைப்பை பாராட்டி இயக்குனர் லிங்குசாமி தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், சென்னைக்கு வர விமானங்கள் ஏதும் இல்லாததால் கடந்த 3 நாட்களாக தஞ்சாவூரில் இருந்தேன். சென்னை மழை நிலவரத்தை பார்த்து கவலையடைந்தேன். நேற்று இரவு இங்கு வந்து இறங்கியதும், அடையாறில் ஒருவரை இறக்கி விடுவதற்காக காரில் சென்றேன்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
ஏர்போர்ட்டில் இருந்து அடையாறு சென்றுவிட்டு பின்னர் வளசரவாக்கம் வரும்வரை மாநகராட்சி அதிகாரிகளும், ஊழியர்களும் என்ன அழகா வேலை பார்த்திருக்காங்க. 2015-ம் ஆண்டு வெள்ள பாதிப்பை பார்த்தாலோ என்னவோ இம்முறை சரியான திசையில் முன்னேறி சென்றுகொண்டிருப்பது தெரிகிறது.
தாழ்வான பகுதிகளில் தேங்கி இருக்கும் தண்ணீரை வெளியேற்றி அங்கிருக்கும் பலரை மீட்க வேண்டும். இன்னும் நிறைய பணிகள் செய்ய வேண்டியுள்ளது. அரசாங்கம் இதனை விரைவுபடுத்தும் மற்றும் விரைவில் நகரத்தை மீட்டெடுக்கும் என்று நம்புகிறேன். இந்த பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு என்னால் இயன்ற உதவியை செய்ய விரும்புகிறேன்” என பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... 10 வருஷமா இதேநிலை தான்... அலட்சியம்; தவறான நிர்வாகம்; பேராசையே வெள்ளத்துக்கு காரணம் - சந்தோஷ் நாராயணன் ஆதங்கம்