‘அசுரன்’படத்தில் தலித் மக்களின் வாழ்வை வலியை மிகப்பிரமாதமாகப் பதிவு செய்துள்ளார் என்று இயக்குநர் வெற்றிமாறனைப் புகழ்ந்து பதிவிட்ட விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு கூடவே இயக்குநர் பா.ரஞ்சித்தையும் வம்புக்கு இழுத்திருந்தார். அப்பதிவு ஒரு பெரும் ஜாதிக்கலவரம் போல வலைதளங்களில் வைரலாகி வர, மேற்குத் தொடர்ச்சி மலை’பட இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருக்கிறார்.

கடந்த இரு தினங்களுக்கு முன் தனது முகநூல் பதிவில்,...சாதிய- வர்க்க அடக்குமுறைகளுக்கு எதிராக இவ்வளவு துணிச்சலாக இதுவரை தலித்துகளின் பக்கம் நின்று யாரும் படம் எடுக்கவில்லை. அப்படி எடுத்திருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன்.எழுத்தாளர் பூமணியின் வெக்கை நாவலை அப்படியே காட்சிபடுத்தியிருக்கிறார் இயக்குனர். பஞ்சமி நிலங்கள் குறித்து துணிச்சலாக பேசியிருக்கிறான் அசுரன். “திருப்பி அடிச்சா தான் நம்ம வலிமை அவனுகளுக்கு புரியும்” என்று ஆதிக்க சாதியினருக்கு எதிராக அசுரன் வேட்டையாடியிருக்கிறான்.’ஜெய் பீம்’என்று சொல்லாமலே தலித்துகளின் உண்மையான வலியை ‘அசுரன்’படத்தில் கொண்டுவந்திருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன் 'என்று பா.ரஞ்சித்தை வம்புக்கு இழுத்திருந்தார்.

இப்பதிவு வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் இயக்குநர் லெனின் பாரதி தனது ட்விட்டர் பக்கத்தில்,..தோழர் பா.ரஞ்சித் திரையில் முக்கியமான பெருங்கதவை திறந்துவிட்டவர். அந்த வாயில்தான் இன்று நீங்கள் சொல்லும் படம் வலம்வரக்  காரணம் தோழர்.. தோழமையோடு பயனித்து சமூக சமநிலை நோக்கி நகர்வோம்... @VanniArasu_VCK@beemji@thirumaofficial@Neelam_Culture என்று பதிவிட்டிருக்கிறார்.