’லயோலா கல்லூரி ’வீதி விருது விழா’வில் வைக்கப்பட்ட புகைப்படங்கள் என் தாய்க்கு சமமாக மதிக்கும் தேசத்தைக் கொச்சைப்படுத்துகின்றன. அச்செயல்களில் ஈடுபட்டவர்களை சும்மா விடக்கூடாது’ என தனது ட்விட்டர் பக்கத்தில் கொதித்திருக்கிறார் ‘என்னம்மா’ லட்சுமி ராமகிருஷ்ணன்.

கடந்த 19 மற்றும் 20 ஆம் தேதிகளில் சென்னை லயோலா கல்லூரியில் ஓவிய புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் இடம்பெற்ற சில புகைப்படங்களில் இந்து மதத்தை, மோடி ஆட்சியை  ஆபாசமாக சித்தரித்து சில ஓவியங்கள் இடம்பெற்றிருந்தன.

இத்தயையடுத்து, பிஜேபியின் தலைவர்கள் ஹெச்.ராஜாவும், டாக்டர் தமிழிசையும் கடுமையான எச்சரிக்கைகள் விடுக்க,  பல்வேறு இந்து அமைப்புகளும்  கண்டனம் தெரிவிக்க லயோலா கல்லூரி சார்பாக அதற்கு மன்னிப்பு கேட்கப்பட்டது.

 இந்நிலையில் லயோலா கல்லூரியின் இந்த செயலை கண்டித்து நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்தார். அச்செய்தியில்,’ லயோலா கல்லூரியில் கண்டனத்துக்குரிய புகைப்படங்கள் வைக்கப்பட்டிருப்பது ஒரு வகையான தீவிரவாதச் செயலாகும். என் நாட்டைப் பழிப்பது என் தாயைப் பழிப்பதற்கு சமம். அதே போல் என் மதமும் தாயும் ஒன்றுதான். அதை மதிக்கக்கற்றுக்கொள்ளவேண்டும். ஆனால் அங்கே வைக்கப்பட்டுள்ள படங்கள் வக்கிரபுத்தி உள்ளவர்களுடையது’ என்று சாடியிருக்கிறார் இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன்.