'துருவங்கள் 16 ' படத்தின் மூலம் சிறந்த இயக்குனராக அனைவராலும் அறியப்பட்டவர் இளம் இயக்குனர் கார்த்திக் நரேன். இந்த படத்தை  தொடர்ந்து இவர் இயக்கியுள்ள, 'நரகாசுரன்' படம் ஒரு சில காரணங்களால் இன்னும் வெளியாகாமல் உள்ளது.
 
இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து விட்ட நிலையில் , தற்போது மாஃபியா என்கிற படத்தை இயக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.  இந்த படத்தை பல பெரிய பட்ஜெட் படங்கள் வரை,  சிறிய படஜெட் படங்கள் முதல் தயாரித்து வரும் லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிக்க உள்ளது.

இந்த படத்தில் கதாநாயகனாக நடிகர் அருண் விஜய் நடிக்கிறார். மேலும் மற்றொரு நாயகனாக பிரசன்னாவும்,  கதாநாயகியாக மேயாத மான்,  கடைக்குட்டி சிங்கம்,  ஆகிய படங்களில் நடித்த பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். 

இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கிய நிலையில் இந்த படத்தை 37 நாட்களில் எடுத்து முடிக்க இயக்குனர் கார்த்திக் நரேன் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.  மேலும் இந்த படத்தின் கதையை படித்துப் பார்த்தபின் அருண் விஜய் மற்றும் மற்ற நடிகர்கள் எந்த ஒரு திருத்தமும் சொல்லாமல் நடிக்க ஒப்புக்கொண்டதாக கூறியுள்ளார்.  மேலும் இந்த படத்தை பற்றிய மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.