மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 3 மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று உள்ளது.

நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதிவரை சென்று யார் வெற்றி பெற போகிறார்கள் என்ற ஆவல் இப்போதே கிளம்பி உள்ளது. அந்த வகையில் அதிக மக்கள் ஆதரவு கொண்ட தக்ஷன், கவின், லாஸ்லியா, சேரன், ஷெரின் என இவர்களில் யாராவது ஒருவர் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஒவ்வொரு நாளும் நிகழ்ச்சிக்கு சுவாரஸ்யத்தைக் கூட்டும் பொருட்டு பிக்பாஸ் டீம்  ஏதாவது ஒரு புதிய விஷயத்தை செலுத்துவார்கள். அந்தவகையில் போட்டியாளர்களிடம்  தாங்கள் யாருடன் பேச விருப்பப்படுகிறீர்கள்? என்ற கேள்வியை முன் வைக்கப்பட்டது. போட்டியாளர்கள் அவரவர் விருப்பத்தை தெரிவித்து இருந்தார்கள். பின்னர் யாரும் எதிர்பாராத விதமாக சென்றவாரம் போட்டியாளர்களின் பள்ளி படிப்பு ஆசிரியர்கள் தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

அந்த வகையில் இயக்குனர் சேரனிடம் நேரலையில் பேசுவதற்காக கேஎஸ் ரவிக்குமார் கமலிடம் அனுமதி கேட்டு பேசினார். அப்போது அனைவரைப் பற்றியும் சில கருத்துக்களை சொல்லி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார். அப்போது லாஸ்லியாவிடம் பேசும்போது சினிஉலகமே  உங்களுக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறது..இப்போதைக்கு அவ்வளவுதான் சொல்ல முடியும் என கேஎஸ் ரவிக்குமார் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் நார்மலாக பேசிவிட்டு தன்னுடைய லைனை துண்டித்து கொண்டார்.

கே.எஸ்.ரவிக்குமார் இவ்வாறு தெரிவித்து உள்ளதற்கு மக்கள் இவ்வாறு கருத்து தெரிவித்து சமுக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். அதில் "தக்ஷன்,முகேன், கவின் என வளர்ந்து வரும் நபர்கள் உள்ளே இருக்கும் போது லாஸ் லியாவிடம் மட்டும் கே.எஸ்.ரவிக்குமார் இவ்வாறு தெரிவித்ததை வைத்து பார்க்கும் போது முதல் வாய்ப்பே அவர் தான் தருவாரா என்ற எதிர்பார்ப்பை கிளப்பி உள்ளது என கருத்தை பதிவிட்டு வருகின்றனர்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க சினிமாவில் நடிக்க எத்தனையோ நபர்கள் முயற்சித்து வரும் போது அவர்களுக்கெல்லாம் ஆடிஷன் வைத்து பல சிக்கலை தாண்டி நடிக்க வாய்ப்பு  கிடைக்குமா என்பதே சந்தேகம். ஆனால் டைரக்டர் மற்றும் தயாரிப்பாளர் நினைத்து விட்டால் யாரை வேண்டுமானாலும் நடிக்க வைக்க முடியும் என்பதை உணர்த்துவதாக சில விஷயம் அமைந்து விட்டது.