ஏற்கனவே பல சோதனைகளைக் கடந்து ‘இந்தியன் 2’படத்தின் படப்பிடிப்பு மெல்ல துவங்கியிருக்கும் நிலையில் அப்படத்தின் கதை இதுதான் என்று இணையதளங்களில் பரப்பப்படும் மொக்கைக் கதை ஒன்றால் இயக்குநர் ஷங்கர் பயங்கர அப் செட் ஆகியிருப்பதாகத் தெரிகிறது.ஏற்கனவே கடந்த வாரம் ஐஸ்வர்யா ராஜேஷ் படத்தை விட்டு வெளிநடப்புச் செய்ததால் ‘அடி தாங்கும் உள்ளம் இது இடி தாங்குமா?’ என்று பாடிய ஷங்கர் இந்தக் கதை நடமாட்டத்தால் இன்னும் கலகலத்துப்போய்விட்டாராம்.

நீண்ட நாட்களாக ஸ்டார்ட்டிங் டிரபுளில் தவித்து வந்த ‘இந்தியன்2’ படப்பிடிப்பு பூந்தமல்லி அருகே தொடங்கி உள்ளது.ஆனால் அப்படப்பிடில் கமல் இன்னும் முழு மூச்சில் கலந்துகொள்ளத்துவங்கவில்லை. இந்நிலையில் இதுதான் இப்படத்த்ன் கதை என்று ஓரிரு தினங்களாக இணையதளங்களில் சிலர் கதை விட்டுக்கொண்டிருக்கிறார்கள். சும்மா சொன்னால் மக்கள் நம்பமாட்டார்களே என்பதால் ஷங்கர் யூனிட்டிலிருந்து கசிந்த கதை என்ற பில்ட் அப் வேறு.

இதோ அந்த மொக்கைக் கதை...சமூக ஆர்வலரான சித்தார்த், மனைவி ரகுல் பிரீத்சிங்குடன் வசிக்கிறார். சொந்தமாக யூடியூப் சேனலும் நடத்துகிறார். ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கும் அவர் யூடியூப் சேனலில் அரசியல்வாதிகள் ஊழல்களை அம்பலப்படுத்துகிறார். அவருக்கு மிரட்டல்கள் வருகின்றன. வெளிநாட்டில் இருக்கும் வயதான கமல்ஹாசன் அந்த யூடியூப் சேனலை பார்த்து கொதிக்கிறார்.ஊழல் அரசியல்வாதிகளை களையெடுக்கும் நோக்கோடு விமானம் ஏறி சென்னைக்கு வருகிறார். இறந்துபோன மனைவியின் நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்திவிட்டு சித்தார்த்தை சந்திக்கிறார். அவரிடம் இருந்து ஊழல் செய்து சொத்து குவித்த அரசியல்வாதிகள் பட்டியலை பெறுகிறார்.

பின்னர் வர்ம கலையால் ஒவ்வொருவராக அழிக்கிறார். அவருக்கு சித்தார்த்தும் வர்ம கலை பற்றி ஆராய்ச்சி செய்யும் காஜல் அகர்வாலும் உதவி செய்கிறார்கள். அரசியல்வாதிகள் வர்ம கலையால் கொல்லப்படுவதை பார்த்து போலீசார் அதிர்கிறார்கள். கமலை பிடிக்க வலை விரிக்கிறார்கள். அவர் சிக்கினாரா? என்பது கிளைமாக்ஸ். இப்படிப் போகிறது அந்தக் கதை. இதை மக்கள் சீரியஸாக எடுத்துக்கொண்டு நம்பிவிடுவார்களோ என்று அநியாயத்துக்குக் கவலைப்படுகிறாராம் ஷங்கர்.