director have big profit in low budget film

பசங்களுக்கான படத்தை எடுத்து தேசிய விருது வாங்கிய இயக்குநரைத் தான் பலே தயாரிப்பாளர் என்று பாராட்டுகிறது கோலிவுட்.

தனது உதவியாளரை இயக்குநராக்கி ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் ஒரு நிறுவனத்துக்கு படம் தயாரித்திருக்கிறார் அந்த இயக்குநர். தனது உதவி இயக்குநருக்கே வாய்ப்பு கொடுத்த வள்ளல் என்ற ரீதியில் புகழப்படுகிறார்.

ஆனால் நடந்ததோ வேறாம். அந்த தயாரிப்பாளரிடம் பட்ஜெட் என்று சொல்லி வாங்கிய பணத்தில் பாதியைக் கூட செலவு செய்யவில்லையாம். ஃபர்ஸ்ட் காப்பி என்பதால் அது அத்தனையும் இயக்குநரையே சேருமாம். தயாரிப்பாளரால் கணக்கு பார்க்க முடியாது. 

அப்படி இயக்குநர் பார்த்த மேக்சிமம் லாபத்தை வைத்து ஒரு மினிமம் பட்ஜெட் படத்தையே எடுக்கலாம் என்று காதைக் கடிக்கிறது கோலிவுட் கிளி.