தமிழ் சினிமாவில் கமெர்சியல் வெற்றி படங்களை கொடுத்து, முக்கிய இயக்குனர்களில் ஒருவராக அறியப்படுபவர் இயக்குனர் ஹரி. இவரின் தாயார், மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் பிரசாந்த், மற்றும் சிம்ரன் நடித்த 'தமிழ்' படத்தின் மூலம் இயக்குனராக தன்னுடைய திரையுலக பயணத்தை ஆரம்பித்தவர், இயக்குனர் ஹரி. இந்த படத்தை தொடர்ந்து இவர் இயக்கிய சாமி திரைப்பப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

பின், கோவில், ஐயா, என பல படங்களை இயக்கிய இவர், நடிகர் சூர்யாவின் ஆஸ்தான இயக்குனர். இதுவரை நடிகர் சூர்யாவை வைத்து இவர் இயக்கிய, ஆறு, வேல், சிங்கம் சீரிஸ் ஆகிய படங்கள் தொடர் வெற்றி பெற்றது.

அடுத்ததாக சூர்யாவை வைத்து ஹரி ஒரு படத்தை இயக்க உள்ளதாகவும், இப்படம் ஒரு சில வாரங்களில் துவங்கும் என கூறப்பட்டு வந்த நிலையில், இயக்குனர் ஹரியின் தயார் கன்னியம்மாள் திடீர் என ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ளார்.

இவருக்கு வயது 81 . இவருடைய உடல் இறுதி அஞ்சலிக்கு வைக்கப்பட்ட பின், ஹரியின் சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டத்திற்கு எடுத்து செல்லப்பட்டு, இன்று 3 மணி அளவில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சூர்யா, மற்றும் இயக்குனர் ஹரிக்கு சொந்தமான பலர் நேரடியாக சென்று ஹரியின் தாயாருக்கு அஞ்சலி செலுத்தினர்.