நடிகை ஒருவருக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த ரஞ்சித் என்கிற இயக்குனரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

25 வயது இளம் நடிகையை வைத்து, ரஞ்சித் என்கிற 25 வயது இளம் இயக்குனர், 'மூன்று பேர்' என்கிற வெப் தொடர் ஒன்றை இயக்கி வந்துள்ளார். இந்த வெப் தொடரில் நடித்து வந்த நடிகையிடம் பல முறை ரஞ்சித் தன்னுடைய காதலை கூறியுள்ளார். நடிகை அதனை ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது.

மேலும் சில முறை வலுக்கட்டாயமாக பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இப்படி தன்னிடம் நடந்து கொள்ளவேண்டாம் என பல முறை எச்சரித்த அந்த நடிகை, ஒரு நிலைக்கு மேல் பொறுமை இழந்து, கானத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார், அந்த வெப் சீரிஸில் பணியாற்றிய இயக்குனர் ரஞ்சித் மற்றும் துணை இயக்குனர் ஒருவரை அழைத்து விசாரணை செய்ததில், நடிகைக்கு ரஞ்சித் பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது. எனவே அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.