இயக்குனர் கௌதமன் இயற்கையை நடித்துள்ள ‘படையாண்ட மாவீரன்’ படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது.

கௌதமன் இயக்கி நடிக்கும் 'படையாண்ட மாவீரா’

தமிழ் திரையுலகில் கவனிக்கத்தக்க இயக்குனராக இருப்பவர் கௌதமன். தற்போது வி.கே ப்ரொடக்‌ஷன் தயாரிக்கும் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட படம் ஒன்றை இயக்கி, கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இந்தப் படத்தில் மன்சூர் அலிகான், ராதாரவி மொட்டை ராஜேந்திரன், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, ஆடுகளம் நரேன், இளவரசு, கிங்ஸ்லி என மிகப் பெரிய நடிகர் பட்டாளமே நடித்துள்ளனர். புதுமுகம் ஒருவர் கதாநாயகியாக களமிறக்கப்பட்டுள்ளார்.

பாமகவின் காடுவெட்டி குருவாக நடிக்கும் கௌதமன்

ஜிவி பிரகாஷ் இசையமைப்பில், பாடல்களை வைரமுத்து எழுதியுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் விருத்தாச்சலம், நெய்வேலி, பண்ருட்டி பகுதிகளில் நடைபெற்றது. தற்போது படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் மண்ணையும், மானத்தையும் காக்க வீரத்துடன் போராடி வாழ்ந்த ஒரு மாவீரன் பற்றிய உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படுவதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

'படையாண்ட மாவீரா’ படத்திற்கு ஏற்பட்ட சிக்கல்

பாமகவின் மூத்த நிர்வாகியாகவும், வட தமிழகத்தில் அசைக்க முடியாத அரசியல் தலைவராகவும் இருந்த, மறைந்த காடுவெட்டி குருவின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டு இருப்பதாகவும் இந்த படத்திற்கு தடை கோரியும் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இது குறித்து பதில் அளிக்க கௌதமனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்தப் படம் கடந்த 23-ம் தேதி வெளியாக இருந்த நிலையில் கோர்ட்டின் இந்த உத்தரவால் வெளியீட்டு தேதி மாற்றப்பட்டுள்ளது.

'படையாண்ட மாவீரா’ வெளியிடுவதில் தாமதம்

இந்த நிலையில் படத்தின் டிரெய்லரை தற்போது படக்குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். கௌதமன் 1998-ம் ஆண்டு முரளி நடிப்பில் வெளியான ‘கனவே கலையாதே’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர். 2010-ம் ஆண்டு வெளியான ‘மகிழ்ச்சி’ படத்தை இயக்கியிருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் 'படையாண்ட மாவீரா’ படத்தை இயக்கியுள்ள அவர், தற்போது கதாநாயகனாகவும் அவதாரம் எடுத்துள்ளார்.

Padaiyaanda Maaveeraa Trailer | V.Gowthaman | GV. Prakash | Sam CS | Vairamuthu | VK Productions ,