Vikram Vedha Hindi remake : விக்ரம் - வேதா இந்தி ரீமேக்கில் ஹிருத்திக் ரோஷனை நடிக்க வைத்தது ஏன் என்பது குறித்து இப்படத்தின் இயக்குனர்களில் ஒருவரான காயத்ரி சமீபத்திய பேட்டியில் கூறி உள்ளார்.
தமிழில் கடந்த 2017-ம் ஆண்டு புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் விக்ரம் வேதா. மாதவன், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான இப்படம் அமோக வரவேற்பை பெற்றது. இப்படத்தில் நடிகர் மாதவன் விக்ரமாகவும், விஜய் சேதுபதி வேதாவாகவும் போட்டி போட்டு நடித்து அசத்தி இருந்தனர்.
தமிழில் ஹிட்டான இப்படம் தற்போது தெலுங்கில் அதே பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இப்படத்தையும் புஷ்கர் - காயத்ரி தான் இயக்குகின்றனர். இப்படத்தில் விக்ரமாக சையிப் அலிகானும், வேதாவாக ஹிருத்திக் ரோஷனும் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், விக்ரம் - வேதா இந்தி ரீமேக்கில் ஹிருத்திக் ரோஷனை நடிக்க வைத்தது ஏன் என்பது குறித்து இப்படத்தின் இயக்குனர்களில் ஒருவரான காயத்ரி சமீபத்திய பேட்டியில் கூறி உள்ளார். அவர் கூறியதாவது : விக்ரம் வேதா படம் 2017-ம் ஆண்டு தமிழில் ரிலீசானதும், எங்களுக்கு முதல் ஆளாக போனில் அழைத்து வாழ்த்து சொன்னது ஹிருத்திக் ரோஷன் தான்.

அந்த கதையின் தன்மை அவருக்கு புரிந்திருந்ததை எங்களால் உணர முடிந்தது. அதனால் அவரை நடிக்க வைத்ததாக கூறிய அவர், இப்படம் இந்தியில் பிரம்மாண்டமாக உருவாகி வருவதாக குறிப்பிட்டார். ஹிருத்திக் ரோஷனை பொறுத்தவரை எந்தவித ஈகோவும் இல்லாத மனிதர், நாம் எது சொன்னாலும் கேட்டுக்கொண்டு நடித்துக் கொடுப்பார்” என காயத்ரி பாராட்டி உள்ளார்.
இதையும் படியுங்கள்... வேற வழியில்ல... அனிருத்தை தான் கல்யாணம் பண்ணிப்பேன் - விருது விழாவில் ஓப்பனாக சொன்ன அரபிக் குத்து பாடகி
