காமெடி நடிகர் யோகி பாபு, நகைச்சுவை கதாபாத்திரங்கள் மட்டும் இன்றி, கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார். இவரின் கை வசம் தற்போது, அரை டஜன் படங்களுக்கு மேல் உள்ளது.

திருமணம் ஆகி விட்டதால், குடும்பத்துடன் நேரம் செலவிடுவதற்காக, சமீப காலமாக தான் நடிக்கும் படங்களின் எண்ணிக்கையை குறைத்து கொண்டுள்ளார் புது மாப்பிள்ளை.

இது ஒரு புறம் இருக்க, யோகிபாபு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் இயக்குனர் கிஷோர் என்பவர் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.

இந்த புகாரில் கிஷோர் கூறியுள்ளதாவது, தான் இயக்கி, தயாரித்திருக்கும் படம் ஒன்றில், நடிகர் யோகிபாபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து சில காலம் ஆகிவிட்ட போதிலும், யோகி பாபு தொடர்ந்து டப்பிங் பேச மறுத்து வருவதாக கூறி, தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார். விரைவில் இந்த புகாரை தயாரிப்பாளர் சங்கம் விசாரிக்கும் என தெரிகிறது.