'பாலைவனச் சோலை' படத்தை இயக்கிய இரட்டையர் இயக்குநர்களான ராபர்ட்-ராஜசேகரில் ஒருவர்,  இயக்குநர் ராஜசேகர். கடந்த சில வருடங்களாக உடல்நல குறைவு காரணமாக, அவதி பட்டுவந்த இவர் இன்று காலை, சென்னை  ராமச்சந்திரா மருத்துவமனையில் காலமானார்.

இயக்குநராக மட்டுமில்லாமல் திரைப்பட நடிகராக, 'சரவணன் மீனாட்சி'  சீரியலில் இவர் நடித்த தாத்தா வேடத்தை யாரும் எளிதில் மறக்க முடியாது. ரசிகர்கள் மத்தியில் நன்கு பரிச்சியமானவர் ராஜசேகர்.  சின்னத்திரை சங்கங்களில் ,முக்கிய பொறுப்புகளையும் வகித்துள்ளார்.

இயக்குனர் இமாம் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான  'நிழல்கள்' படத்தின் நாயகர்களில் ஒருவராகவும் நடித்தவர். இதுதான் இவரது முதல் அறிமுகம்.

இந்நிலையில் சமீப காலமாக உடல் நலம் சரியி்ல்லாமல் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், இன்று காலை காலமானார். இவரின் மறைவு  செய்தியை  அறிந்து பல வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் இவருக்கு தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். 

குறிப்பாக, இந்த இரட்டையர் ஜோடி  'மனசுக்குள் மத்தாப்பூ', 'சின்னப்பூவே மெல்லப் பேசு', 'தூரம் அதிகமில்லை', 'பறவைகள் பலவிதம்', 'தூரத்துப் பச்சை', 'கல்யாணக் காலம்' போன்ற படங்களை இயக்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.