director complient for ajith

அஜித் எப்போதும் நல்லதை செய்தார் தான் பல இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் கூறி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் ஒரு இயக்குனர் தனக்கு நஷ்டம் ஏற்பட காரணம் அஜித் என கூறியுள்ளார்.

சமீபத்தில் நடந்த விழித்திரு படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துக்கொண்ட இயக்குனர் மீரா கதிரவன் பேசுகையில் ‘விதார்த் இந்த படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போது அஜித் சார் என்னிடம் ஒரு நாள் பேசினார்.

விதார்த் வீரம் படத்தில் நடிக்கவேண்டும், உங்கள் கால்ஷிட் கொஞ்சம் இடிக்கின்றது என கூற, அதற்கு ஏற்றார் போல் நான் அவருடைய கால்ஷிட்டை மாற்றினேன்.

இதனால், 6 மாதம் படப்பிடிப்பே நின்றது, ஆனால், அவர் இன்று ப்ரோமோஷனுக்கு கூட வரவில்லை’ என கோபமாக பேசினார்.

ஏன் ஒரு சிறு தயாரிப்பாளர் படம் 6 மாதம் நின்றதால் எவ்வளவு பணம் நஷ்டம் ஆகும் என அஜித்திற்கு தெரியுமே, என்றார் அங்கு இருந்த பலரும் அஜித் இப்படி செய்தாரா என்கிற வியாப்பிலேயே இருந்தனர்.