அணைத்து மக்களும் ரசிக்கும்படியான, கிராமத்து கதைகளை, எதார்த்தமான படங்களாக இயக்கி, மக்கள் மனதில் வெற்றி இயக்குனர் என்கிற இடத்தை பிடித்தவர் சேரன். படம் இயங்குவதையும் தாண்டி, ஆட்டோகிராப் படத்தில் இவர் வெளிப்படுத்தியிருந்த நேர்த்தியான நடிப்பு, இவரை சிறந்த நடிகராகவும் வெளிப்படுத்தியது.

கடந்த சில வருடங்களாக இவர் இயக்கத்தில் வெளியான திரைப்படங்கள் படு தோல்வியை தழுவியது. எனவே விஜய் டிவி தொலைக்காட்சியில் இருந்து வந்த பிக்பாஸ் அழைப்பை ஏற்று இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
வெற்றி பெரும் அணைத்து வாய்ப்புகளும் இருந்த நிலையில், மக்களின் ஓட்டுகள் அடிப்படையில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில், தற்போது சேரன் புதிய முயற்சி ஒன்றை கையில் எடுத்துள்ளார். wall Poster என்கிற பெயரில் புதிய you tube channel ஒன்று துவங்கி இருப்பதாகவும். பல்வேறு இளைஞர்களின் திறமையை வெளியே கொண்டுவருவதற்காக இதை துவங்கியுள்ளதாக ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ள சேரன். முதலில் தினமும் செய்திகளோடு விரைவில் துவங்குகிறோம்.. தொடர்ந்து பன்முகத்தன்மையோடு வளரும்... ஆதரவை கொடுத்து வளர்க்கவும். என கேட்டுக்கொண்டுள்ளார்.
இயக்குனர் சேரனின் இந்த புதிய முயற்சிக்கு அவருடைய ரசிகர்கள் தொடர்ந்து தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Apr 1, 2020, 1:32 PM IST