​தமிழ் சினிமாவில் இப்படியொரு ஆபாசமா? என காண்போர் வெட்கி கூசும் வகையில் “இரண்டாம் குத்து” என்ற அடல்ட் படம் தயாராகியுள்ளது. வக்கிரத்தின் உச்சமாக இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியானது. இரட்டை அர்த்த வசனங்கள், படுக்கை அறை காட்சிகள், முத்தக்காட்சிகள் என கிட்டதட்ட பிட்டு படங்களை மிஞ்சும் அளவிற்கு வெளியாகியுள்ள டீசரைக் கண்டு தமிழ் திரையுலகினர் கொதித்து போயுள்ளனர். இந்த மாதிரியான கேவலமான படங்கள் குழந்தைகளின் மனதில் விஷத்தை கலக்கும் என்பதால்  “இரண்டாம் குத்து” படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். 

இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற ஆபாச படத்தை இயக்கிய சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கி நடித்துள்ள திரைப்படம் இரண்டாம் குத்து. வாயால் சொல்லக்கூசும் அளவிற்கு படுகேவலமான இந்த தலைப்பின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி தமிழக மக்களை அதிர்ச்சியடைய வைத்து காரணம், கண்ணால் பார்க்க முடியாத அளவிற்கு படுக்கையறை காட்சிகளும், காதில் கேட்க முடியாத அளவிற்கு டபுள் மீனிங் வசனங்களும் அதிகம் இருந்தன. 

 

இதையும் படிங்க: இரவில் யாஷிகாவை தவிக்கவிட்டு தப்பியோடிய பாலாஜி முருகதாஸ்... கிழியும் பிக்பாஸ் பிரபலத்தின் முகமூடி..!

கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் இரண்டாம் குத்து படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வரும் நிலையில், அந்த ஆபாச படம் குறித்து இயக்குநர் சேரன் வெளுத்து வாங்கியுள்ளார். இதுகுறித்து நெட்டிசன் ஒருவர் சேரனின் ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். ‘இரண்டாம்குத்து எனும் படம் உங்க திரை உலகுக்கே கலங்கம் கற்பிப்பது. சொரியான் வழியில் free sex culture, முற்போக்குன்னு சொல்லி தலைமுறைகளையே சீரழிக்கிறது. இன்றும் முற்போக்குன்னு மதிப்பிருக்க காரணம் உங்களைப் போன்ற இயக்குனர்களே. சேரன் , பாரதிராஜா இதற்கு உங்கள் கண்டனம் தேவை ’ என கேட்டிருந்தார். 

 

இதையும் படிங்க: தனுஷுக்கு ‘நோ’சொன்ன சாய்பல்லவி... சூப்பர் டூப்பர் ஹிட் படத்தில் தவறவிட்ட வாய்ப்பு...!

அதற்கு பதிலளித்த சேரன், மக்கள் இதுபோன்ற படங்களை புறந்தள்ளினால் போதும்.. ஏற்கனவே முதல் குத்துக்கு கலெக்‌ஷனை அள்ளிக்கொடுத்ததால்தான் இந்த தைரியம் வருது… ஆனாலும் அந்த போஸ்டர் அருவருப்பான ஆபாசம்.. கண்டிப்போம்.. அந்த வேறறுப்போம்.. அரசும் இதுபோன்ற படங்களை தடைசெய்யனும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.