MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கழுவி ஊற்றிய தவெக-வினர்... மீண்டும் வீடியோ போட்டு விஜய்யை வம்பிழுத்த ஜூலி..!

கழுவி ஊற்றிய தவெக-வினர்... மீண்டும் வீடியோ போட்டு விஜய்யை வம்பிழுத்த ஜூலி..!

விஜய்யை விமர்சித்து வீடியோ வெளியிட்டிருந்த ஜூலியை தவெகவினர் சாடிவந்த நிலையில், தற்போது விஜய்க்கு சவால்விடும் வகையில் மற்றொரு வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார்.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 25 2026, 01:25 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Bigg Boss Julie Challenge TVK Vijay
Image Credit : X

Bigg Boss Julie Challenge TVK Vijay

நடிகர் விஜய் அண்மையில் வேலூரில் நடைபெற்ற தவெக கூட்டத்தில் பேசும் போது ஒரு குட்டி ஸ்டோரி ஒன்றை கூறினார். அதில் ஜல்லிக்கட்டு காளையை உதாரணமாக வைத்து ஒரு கற்பனை கதையை விஜய் சொன்னார். உடனே ஜல்லிக்கட்டு போராளியான ஜூலி தன்னால் தான் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைத்தது போலவும், அதற்கு பிராண்டு அம்பாசிடர் போலவும் பேசி ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து அவரை நெட்டிசன்களும், தவெகவினரும் கடுமையாக சாடி வீடியோக்கள் வெளியிட்டு வந்தனர். தற்போது அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஜூலி மற்றொரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
ஜூலியின் அடுத்த வீடியோ
Image Credit : Facebook

ஜூலியின் அடுத்த வீடியோ

அதில் ஜூலி பேசியதாவது : “விஜய் அண்ணா உங்க வேலூர் பரப்புரை பார்த்து, அதுல எதுவும் இல்லைங்குற ஆதங்கத்துல ஒரு வீடியோ போட்டேன். உங்களுடைய ரசிகர்கள், எல்லா சோசியல் மீடியா தளங்களிலும் என்னை கடிச்சு வச்சுட்டு இருக்காங்க. இந்த மைனர் பசங்க கிட்ட இருக்குறது முக்கால்வாசி ஃபேக் ஐடி தான். அதைவச்சு தான் என்னை மிரட்டிகிட்டும் இருக்காங்க. அதுக்காக பயந்து நான் அந்த வீடியோவை டெலிட் பண்ணவும் மாட்டேன், என்னுடைய கருத்துக்களில் இருந்து பின்வாங்கவும் மாட்டேன். என்னை மிரட்டினா பரவாயில்ல, என்னை சார்ந்தவங்களையும் மிரட்டுறதுனால, இதை சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கேன்.

Related Articles

Related image1
வாடகை வீடு தான்... யாருக்கும் காட்டுனதில்ல - 11 வருஷமா வாழ்ந்து வரும் வீட்டை முதன்முறையாக காட்டிய ஜூலி
Related image2
ஜூலி முதல் வனிதா வரை.. பிக் பாஸ் வீட்டை சர்ச்சை வீடாக மாற்றி கன்டென்ட் கொடுத்த சில Interesting Contestants!
34
விஜய்க்கு நேரடி சவால்
Image Credit : our own

விஜய்க்கு நேரடி சவால்

விஜய் அண்ணா உங்களுக்கு என்னை பழிவாங்கனும்னா, நான் என் வீட்ல இருப்பேன், இல்லேனா என் ஆபிஸ்ல இருப்பேன். என்னைய என்னவேணாலும் பண்ணுங்க. ஆனா அவங்கள விட்றுங்க என விஜய்யை நக்கலடிக்கும் தொனியில் பேசிய ஜூலி, அதன்பின்னர், ஓ நீங்க பனையூரைவிட்டு வெளிய வரமாட்டீங்கள்ல, நான் இன்னும் உயிரோட தான் இருக்கேன். நான் வேண்டுமானால் பனையூர் வர்றேன். என்னை திட்டினால் என்னை திட்டுன மாதிரி தான், மக்களை திட்டுனமாதிரினுலாம் யாரையும் உள்ள இழுத்து போட மாட்டேன்.

44
வைரலாகும் வீடியோ
Image Credit : mariajuliana_official

வைரலாகும் வீடியோ

ஒரு பெண்ணுக்கு சோசியல் மீடியாவில், எவ்வளவு மரியாதையும், எவ்வளவு மதிப்பும், எவ்வளவு பாதுகாப்பும் உங்க ரசிகர்கள் மத்தியில இருக்குங்குறத நான் சில தினங்களுக்கு முன் போட்ட வீடியோவுக்கு கீழ இருக்கும் கமெண்டுகளை படிச்சு பாருங்க. அப்ப தெரியும்” என அந்த வீடியோவில் பேசி இருக்கிறார் ஜூலி. விஜய்யை சீண்டியதற்கே அவரை தவெகவினர் வறுத்தெடுத்து வந்த நிலையில், தற்போது அவருக்கு சவால்விடும் வகையில் மறுபடியும் ஜூலி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளதால், இனி என்னவெல்லாம் நடக்கபோகிறதோ என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Julie (@mariajuliana_official)

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
டிவி.கே. விஜய்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Muthukalai Wife Death : சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மனைவி... வலி தாங்க முடியாமல் கதறி அழுத நடிகர் முத்துக்காளை
Recommended image2
This Week OTT Releases : மே 18 முதல் 24 வரை இந்த வாரம் ஓடிடியில் போட்டிபோட்டு ரிலீஸ் ஆகும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் இதோ
Recommended image3
Karuppu Box Office Collection : கங்குவா லைஃப்டைம் வசூலை 3 நாளில் வாரிசுருட்டிய கருப்பு... பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த சூர்யா..!
Related Stories
Recommended image1
வாடகை வீடு தான்... யாருக்கும் காட்டுனதில்ல - 11 வருஷமா வாழ்ந்து வரும் வீட்டை முதன்முறையாக காட்டிய ஜூலி
Recommended image2
ஜூலி முதல் வனிதா வரை.. பிக் பாஸ் வீட்டை சர்ச்சை வீடாக மாற்றி கன்டென்ட் கொடுத்த சில Interesting Contestants!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved