ஜூலி முதல் வனிதா வரை.. பிக் பாஸ் வீட்டை சர்ச்சை வீடாக மாற்றி கன்டென்ட் கொடுத்த சில Interesting Contestants!
தமிழ் உட்பட பல இந்திய மொழிகளில் பிரபலமாக நடந்து வரும் ஒரு நிகழ்ச்சி தான் பிக் பாஸ் நிகழ்ச்சி. குறிப்பாக தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டம் உண்டு, அந்த வகையில் தமிழ் பிக் பாஸில் சர்ச்சைக்குரிய போட்டியாளர்களாக மாறிய சிலர் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Aishwarya Dutta
ஐஸ்வர்யா தாத்தா கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் திரைப்படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா தத்தா, பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டு சர்ச்சைக்குரிய போட்டியாளராக மாறினார். குறிப்பாக ஹிட்லர் கதாபாத்திரம் ஏற்று அவர் ஏற்று பிக் பாஸ் வீட்டில் பயணித்த பொழுது, சக போட்டியாளரான பாலாஜி மீது குப்பைகளை போடச் சொல்லி மாபெரும் சர்ச்சையில் சிக்கினார்.
Meera Mithun
நடிகை மீரா மிதுன் சிறு வயது முதலையே மாடலிங் துறையில் இருந்து வரும் இவர், 2017 ஆம் ஆண்டு வெளியான 8 தோட்டாக்கள் திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் இவர் போட்டியாளராக பங்கேற்றார். இவர் பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்த பொழுதே இவர் மீது சீட்டிங் கேசில் வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தனது சக போட்டியாளர்களுடனும் இவர் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தார்.
Azeem Bigg Boss
கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் சின்னத்திரை நாடகங்களில் நடித்துவரும் நடிகர் தான் முகமது அசீம். இவர் இறுதியாக நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் பங்கேற்று வெற்றியும் பெற்றார். இவர் பங்கேற்ற பொழுது இவருக்கும், சக போட்டியாளர் விக்ரமன் என்பவருக்கும் கடுமையான வாக்குவாதம் நிலவியது. அப்பொழுது தகாத வார்த்தைகளை கொண்டு அவரை அசீம் திடியதும், பின்னர் உலக நாயகன் கமல் அவர்கள் அசீமை கண்டித்ததும் குறிப்பிடத்தக்கது.
Julie
மரிய ஜூலி, சென்னை மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் புகழ்பெற்ற ஜூலி, பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன் பிறகு இவருக்கும், சக போட்டியாளர் ஓவியாவிற்கும் இடையே கடும் வாக்குவாதங்கள் நடைபெற்றது அனைவரும் அறிந்ததே.
Vanitha Vijayakumar
வனிதா விஜயகுமார், இவரால் பிக் பாஸ் புகழ்பெற்றதா? அல்லது பிக் பாஸ் நிகழ்ச்சியால் இவர் புகழ்பெற்றாரா? என்று கேட்டால் அதற்கு பதில் அளிப்பது சற்று கடினமே. மிகப்பெரிய நடிப்பு குடும்பத்தில் இருந்து வந்த வனிதா விஜயகுமார் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல சர்ச்சைக்குரிய விஷயங்களில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.