Asianet News TamilAsianet News Tamil

இயக்குனர் சேரனின் வீட்டில் நிகழ்ந்த எதிர்பாரா மரணம்... ஆறுதல் கூறும் ரசிகர்கள்

இயக்குனரும், நடிகருமான சேரனின் தந்தை எஸ்.பாண்டியன் பழையூர்பட்டியில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அவருக்கு வயது 84.

Director Cheran father Pandian passed away gan
Author
First Published Nov 16, 2023, 11:02 AM IST | Last Updated Nov 16, 2023, 11:02 AM IST

இயக்குனர் கே.எஸ் ரவிக்குமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் சேரன். இதையடுத்து கடந்த 1997-ம் ஆண்டு வெளிவந்த பாரதி கண்ணம்மா படம் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர், அடுத்தடுத்து பொற்காலம், தேசிய கீதம் போன்ற படங்களை இயக்கினார். இதையடுத்து 2000-ம் ஆண்டு சேரன் இயக்கத்தில் முரளி, பார்த்திபன் நடிப்பில் வெளிவந்த வெற்றி கொடிகட்டு திரைப்படம் தேசிய விருதை வென்று அசத்தியது.

பின்னர் சொல்ல மறந்த கதை, தவமாய் தவமிருந்து, ஆட்டோகிராப் போன்ற தரமான படங்களை இயக்கி பேமிலி ஆடியன்ஸின் மனம்கவர்ந்த இயக்குனராக உருவெடுத்தார் சேரன். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் திருமணம். இப்படத்துக்கு பின்னர் படம் இயக்குவதற்கு ரெஸ்ட் விட்ட சேரன் நடிகராக பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட இவர் நடிப்பில் வெளிவந்த தமிழ்குடிமகன் திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

cheran father pandian

இதுமட்டுமின்றி கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் போட்டியாளராகவும் களமிறங்கி அசத்தினார் சேரன். அதில் 91 நாட்கள் வரை தாக்குப்பிடித்த அவர் நூலிழையில் பைனலுக்கு செல்லும் வாய்ப்பை நழுவவிட்டார். தற்போது வெப் தொடர் ஒன்றை இயக்கும் பணிகளில் பிசியாக ஈடுபட்டு வருகிறார் சேரன். இந்த நிலையில், அவரது வீட்டில் ஒரு துயர சம்பவம் நடந்துள்ளது.

சேரனின் தந்தை எஸ்.பாண்டியன் உடல்நலக்குறைவால் மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 84. தந்தையின் மறைவால் சோகத்தில் மூழ்கி இருக்கும் சேரனுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர். சேரனின் தந்தை பாண்டியன் தியேட்டரில் ஆபரேட்டராக பணியாற்றியவர் ஆவார். தனது சொந்த ஊரான பழையூர்பட்டியில் வசித்து வந்த அவர், அங்கேயே மரணமடைந்தார். அவரது இறுதிச்சடங்கு இன்று மாலை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படியுங்கள்... 104 கிலோ எடை உடன் பப்ளிமாஸ் ஆக இருந்த கார்த்தி; சட்டென ஸ்லிம் ஆனது எப்படி? ஜப்பான் நாயகனின் வெயிட் லாஸ் டிப்ஸ்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios