director cheiyaaru ravi death
இயக்குனர் செய்யாறு ரவி, 1993ஆம் ஆண்டு நடிகர் பிரபுவை வைத்து தர்ம சீலன் என்கிற வெற்றி படத்தை இயக்கினார், பின் நவரச நாயகன் கார்த்தி நடிப்பில் வெளிவந்த காமெடி திரைப்படமான அரிச்சந்திரன் என்கிற படத்தை இயக்கி இருந்தார்.
இவருக்கு படங்கள் இயக்குவதற்கு பல வாய்ப்புகள் குவிந்த போதிலும், சின்னதிரை சீரியல்களில் இவர்க்கு அதிக ஆர்வம் இருந்ததால் திரைப்படங்களில் அதிக கவனம் செலுத்த முடியாமல் போனது.
இவர் இயக்கத்தில் வெளிவந்த, கோபுரம், பணம், ஆனந்தம், அன்னக்கொடியும் ஐந்து பெண்களும் ஆகி சீரியல்கள் குடும்ப பெண்களால் மிகவும் ரசிக்கப்பட்டவை.
மேலும் தற்போது மலையாளத்தில் சூப்பர் ஹிட் படமான திரிஷ்யம் படத்தை சிங்களத்தில் ரீமேக் செய்து வருகிறார்..
படத்தின் வேலைகள் முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. இந்த நிலையில் இயக்குனர் செய்யாரறு ரவி நெஞ்சு வலி ஏற்பட்டு அவரது வீட்டில் மரணமடைந்துள்ளார்.
இவர் மரணமடைந்ததை கேள்விப்பட்ட திரையுலகை சேர்ந்த பலர் தங்களுடைய வருத்தத்தை தொலைபேசி மூலமும், நேரிலும் வந்து அவகிருடைய குடுபத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிவருகின்றனர்.
