இயக்குனர் சேரனின்  பிறந்தநாளன்று பிக்பாஸ் பிரபலம் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் , அதற்கான புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது . எந்த  பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் இல்லாத அளவிற்கு பிக் பாஸ் சீசன் 3 படுஜோராக களைகட்டியது .  அதற்கு காரணம் அதில் கலந்துகொண்டவர்கள் சென்டிமென்டுக்கு சென்டிமென்ட் ,  மோதலுக்கு மோதல் என நிகழ்ச்சியை விறுவிறுப்பாக வைத்ததே ஆகும்.  அதில் மிக முக்கியமானவர் இயக்குனர் சேரன். 

கவின்  லாஸ்லியாவுடன்  காதல் போராட்டம் என்றால் லாஸ்லியாவுடன் சேரன் தந்தையாக பாசம் போராட்டம் நடத்தினார் .  இது பல தரப்பினர் மத்தியில் ஆதரவையும் எதிர்ப்பையும் உருவாக்கியது.  அதே நேரத்தில்  மீரா மிதுன் சேரன்மீது தன்னை தொடக்கூடாத இடத்தில் தொட்டார் என அபாண்டமான பழிபோட பின்னர் அதில்  உண்மை இல்லை என தெரிய வந்ததை அடுத்து சேரன் மீதான அபிமானம் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது . இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளர்களான ஷெரின் , ஷாக்ஷி அகர்வால், அபிராமி ,  மற்றும் வனிதா ஆகியோர் சேரனை சந்தித்து நட்பு பாராட்டி வருகின்றனர் .  ஆனால் லாஸ்லியா கவின் ஆர்மியினரோ சேரனை வசைபாடி வருகின்றனர் .  ஆனால் சேரன் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல், தான் உண்டு தன்  வேலையுண்டு என்று இருந்து வருகிறார். 

இந்நிலையில் மீண்டும் படப்பிடிப்பில் பிசியாகி இருக்கும் சேரனின் பிறந்தநாள் கடந்த புதன்கிழமை கொண்டாடப்பட்டது . இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பிக்பாஸ் சீசனில் முக்கியமான நபர்களில் ஒருவரான ஷாக்ஷி  அகர்வால் கையில் கேக்குடன்  சேரன் அவர்களின் வீட்டுக்குச் சென்று சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் .  ஷாக்ஷியை சேரன் அவர்கள் வரவேற்பதும்,  ஷாக்ஷியுடன் சேர்ந்து  கேக் வெட்டி  மகிழும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை ஈர்த்து வருகிறது.