கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தயாரிப்பாளர் சங்கத்திற்கு நடைபெறவிருந்த தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் டி.சிவா தலையில் ஒரு அணியினரும், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தலைமையில் மற்றொரு அணியினரும் போட்டியிட உள்ளனர். தயாரிப்பாளர் சங்கத்திற்கு மீண்டும் எப்போது தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்படாத நிலையில், நேற்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் என்ற தலைப்பில் அறிக்கை ஒன்று வெளியானது. 

இதையும் படிங்க:  கவர்ச்சி போட்டியில் களம் இறங்கிய சுனைனா... சட்டையை கழட்டி விட்டு அட்டகாசம் செய்யும் ஹாட் கிளிக்ஸ்...!

அதில்,  “கொரானா வைரஸ்" தாக்கத்தால் ஊரடங்கு பாதிப்பினால் நமது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் மனரீதியாகவும், தொழில் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே.நமது சங்கத்திற்கு தேர்தல் தள்ளிப்போகக்கூடிய சூழ்நிலை உள்ளதால் இந்த நேரத்தை வீணாக்காமல் நல்ல விஷயங்களை பேசி தீர்வு காண்பதற்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தேர்தல் நேரத்தில் பல அணிகளாக பிரிந்தாலும் திரைத்துறையை சீர்தூக்கி நிலைநிறுத்தும் விஷயத்தில் நாம் அனைவரும் ஒரு அணியாக ஒருங்கிணைந்து செயல்பட்டு தீர்வு கண்டு அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமாக திகழ வேண்டும். நமக்கு உண்டான பிரச்சனையை நாமே ஒருங்கிணைந்து தீர்த்துக்கொள்ள போவதால் இதற்கு நீதிமன்றமோ, நீதிபதியோ, பதிவாளரோ மறுப்பு சொல்லப்போவதில்லை.

இதையும் படிங்க: கவர்ச்சியில் கரை கண்ட நயன்தாரா...தினுசு தினுசாய் ஹாட் போஸ் கொடுத்து அசத்திய கிளிக்ஸ்...!

நமது சக உறுப்பினர்கள் திரைத்துறை சம்பந்தப்பட்ட பிரச்னைகளை அரசாங்கத்திடமும் மற்றும் திரைப்பட நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், பைனான்சியர்கள் கலந்து பேசி நமது திரைத்துறைக்கு ஏற்பட்டிருக்கும் பேரிழப்பை சரிசெய்து தமிழ் திரைத்துறையும் தயாரிப்பாளர்களும் மன நிம்மதியாக சிறப்பாக செயல்பட தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர்களாகிய பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ். தாணு, கேயார், டிஜி தியாகராஜன்,முரளிதரன் இவர்களுடன் மேலும் அனுபவம் வாய்ந்த 36 தயாரிப்பாளர்கள் அடங்கிய மொத்தம் 42 பேர் கொண்ட இந்த குழு திரைத்துறையில் அனைத்து துறைகளுடனும் கலந்து பேசி நல்லதொரு விடியலை தயாரிப்பாளர்களுக்கு ஏற்படுத்தி தருவார்கள் என்ற நம்பிக்கையுடன் தயாரிப்பாளர்கள் அனைவரும் ஒருங்கிணைத்து கீழ்கண்ட குழுவுக்கு ஆதரவும், ஆலோசனைகளையும் நல்கி திரைத்துறை சீறும் சிறப்புமாக விளங்கிட நம் ஒத்துழைப்பினை நல்கிடுவோம்” என்று கூறப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: பட்டன் போடாமல் படுகவர்ச்சியாய் போஸ் கொடுத்த பிக்பாஸ் அபிராமி... மரண பங்கம் செய்யும் நெட்டிசன்கள்...!

அந்த அறிக்கையில் தனது பெயரை பயன்படுத்தி இருப்பது குறித்து இயக்குநர் பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நாகரீகம் என்பது பெயரை பயன்படுத்தும் முன்பு அனுமதி கேட்பது. ஆனால் நான் அறியாமல் எனது பெயரைப் பயன்படுத்தியது சரியல்ல. தேர்தல் தள்ளிப் போடப்பட்ட நிலையில் பொதுவில் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவைத் தெரிந்துகொள்ளாது சுயமாக ஒரு குழுவைத் தேர்ந்தெடுத்து அவர்கள் திரையுலகின் பிரச்சினையைத் தீர்ப்பார்கள் என அறிவிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. அதிலும் என் பெயரை என்னைக் கேட்காமல் பயன்படுத்தியது முற்றிலும் தவறான அணுகுமுறை. பத்திரிகையாளர்கள் இச்செய்தி தவறானது என்பதை உணர்ந்து, எந்தவித அனுமதியும் பெறாமல் எனது பெயரைப் பயன்படுத்தி வெளியிடப்பட்ட அறிக்கையைத் தவிர்க்கும்படி  கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.