இயக்குனர் இமயம் பாரதி ராஜா 'குற்றப்பரம்பரை' நாவலை தழுவி திரைப்படம் எடுக்க உள்ளதாக அறிவித்து, பின் இந்த படத்தின் பூஜையும் உசிலம்பட்டி அருகே போட்டு முடித்தார். மணிரத்னம் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்ட இந்த படத்தின் பூஜைக்கு பின், சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடந்தது. ஒரு சில காரணங்களால், இப்படம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே இந்த படம் ட்ராப் ஆகிவிட்டதாகவே பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், மீண்டும் குற்றபரம்பரைக்கு பாரதி ராஜா உயிர் கொடுக்க உள்ளதாக, அதாவது இந்த படத்தின் படத்தின் வேலைகளை கையில் எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் குற்ற பரம்பரை நாவலை, திரைப்படமாக எடுக்காமல்... இன்றைய ஜெனரேசனுக்கு ஏற்ற போல்... வெப் சீரிஸாக எடுக்க உள்ளதாகவும், இதனை, மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, பிரமாண்டமாக தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்த தகவல் விரைவில் வெளியாக வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே 'குற்றபரம்பரை' படத்தின் நாவலை படமாக எடுப்பதில், இயக்குனர் பாலாவிற்கும், பாரதி ராஜாவிற்கு பிரச்சனைகள் வந்து ஓய்ந்தது குறிப்பிடத்தக்கது.