இயக்குனர் பாலாவை பற்றி பலரும் கூறி நாம் கேள்விப்பட்டிருப்பது, அவர் மிகவும் கோபமான மனிதர் யாரிடமும் அதிகம் பேச மாட்டார் என்பதை தான். ஆனால் இவருடைய படங்கள் ஒவ்வொரும் தற்போதும் ரசிகர்கள் மனதில் அழிக்க முடியாத இடத்தைப் பிடித்தவை. 

கூல் கணவர்:

இயக்குனர் பாலா ஷூட்டிங் ஸ்பாட் மற்றும் வேளையில் இப்படி இருப்பார் அவருடைய மனைவிக்கு மிகவும் கூல் கணவர். மிகவும் ஜாலியாக கலகலப்பாக இருப்பார் மனைவி மலர் என்ன சொன்னாலும் அதனை கேட்டு நடப்பார். அதே போல் அவருடைய மகள் மீதும் கொள்ளை பிரியம் கொண்டவர். 

அடி வாங்கிய பாலா:

ஒரு முறை விமானத்திற்காக பாலாவும் அவருடைய மனைவியும் காத்திருந்த போது ஒரு பெரியவர், அவர்களை கடந்து சென்றுள்ளார்.

பாலா அந்த முடிதியவருக்கு சற்றும் மரியாத கொடுக்காமல் கால் மேல் போட்டு உட்கார, உடனே கோபமாக அவருடைய மனைவி பாலாவை அடித்துள்ளார், பாலாவும் தன் தவறை தெரிந்துக்கொண்டு ஒன்றுமே சொல்லவில்லையாம். இதை பாலாவே சில வருடங்களுக்கு முன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.