‘வர்மா’வின் தமிழ் ரிமேக் திருப்தி அளிக்காததால், அதே படத்தை வேறொரு இயக்குநரை வைத்து மறுபடியும் முதல்ல இருந்து துவங்கப்போகிறோம் என்று அறிவித்துள்ள இ 4 எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் பாலாவின் ‘வர்மா’ என்ற தலைப்பில் யூடிபில் வைரலாக ஓடிக்கொண்டிருக்கும் ட்ரெயிலரை இன்னும் டெலிட் செய்யவில்லை.

கடந்த வாரம் ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகும் அதிர்ச்சியடையும் வண்ணம் ‘வர்மா’ படத் தயாரிப்பு நிறுவனம் பாலாவின் இயக்கம் திருப்தி அளிக்கவில்லை. எனவே வோறொரு இயக்குநரை வைத்து மீண்டும் படத்தை புதிதாகத் துவங்குகிறோம் என்று அறிவித்தது. இதற்கு அடுத்து மூன்று தினங்களுக்குப் பின்னர் விளக்கமளித்த பாலா, தன்னை தயாரிப்பாளர் விலக்கவில்லை என்றும் படைப்பு சுதந்திரம் கருதி தானே வெளியேறுவதாகவும், மேலும் எதுவும் பேசினால் அது நாயகன் துருவின் எதிர்காலத்தைப் பாதிக்கும் என்பதால் அமைதி காக்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.

இப்பிரச்சினைகளை ஒட்டி சில வாரங்களுக்கு முன்பு வெளியிடப்பட பாலாவின் வர்மா என்ற தலைப்பிலுள்ள யுடுப் ட்ரெயிலர் நீக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று காலைவரை அந்த ட்ரெயிலர் நீக்கப்படவில்லை. படச்செய்தி பரபரப்பானதை ஒட்டி சுமார் 10 லட்சம் பார்வையாளர்கள் புதிதாக அந்த ட்ரெயிலரை கண்டுகளித்துள்ளனர். ஏற்கனவே 24 லட்சம் பார்வையாளர்களைக் கொண்டிருந்த ‘வர்மா’ ட்ரெயிலர் தற்போது 34 லட்சம் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.