இயக்குனர் பாரதிராஜா இயக்கிய '16 வயதினிலே', 'சிகப்பு ரோஜாக்கள்', உள்ளிட்ட படங்களில் ஸ்ரீ தேவி நடித்த போது உதவி இயக்குனராகவும் சிறு கதாப்பாத்திரத்திலும் நடித்திருந்தவர் இயக்குனரும், நடிகருமான கே.பாக்யராஜ். 

இந்த படங்களில் ஸ்ரீதேவி நடித்தபோது தன்னிடம் சண்டை இடுவார் என மறக்க முடியாத பசுமையான நினைவுகளை பகிர்ந்துக்கொன்டுள்ளார் கே.பாக்யராஜ்.  

நடிகை ஸ்ரீ தேவியின் மறைவுக்கு பிரபலங்கள் பலர் தொடந்து தங்களுடைய இரங்கலை தெரிவித்து வரும் நிலையில், கே.பாக்யராஜ் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது பேசிய அவர். நான் உதவி இயக்குனராக பணியாற்றிய போது ஸ்ரீ தேவிக்கும் எனக்கும் படப்பிடிப்பு தளத்தில் அடிக்கடி சண்டை வரும். ஸ்ரீ தேவி எப்போதும் தன்னை அழகு குறையாமல் பார்த்துக் கொள்வதில் கவனமாக இருப்பார். இதனால் படப்பிடிப்பில் கலர் கலர் ரிப்பன் மற்றும் பொட்டுக்களை மாற்றிக்கொள்வார். இதனால் படக்காட்சியின் தொடர்ச்சியில் மாற்றம் வரும் என்பதை நான் கூறினால் அதனை புரிந்துக்கொள்ளாமல் தன்னிடம் சண்டையிடுவார். சின்ன சின்ன சண்டைகள் எங்களுக்குள் வந்தாலும் வசனம் சொல்லிக்கொடுக்கும் போது அதனை புரிந்துக்கொண்டு அருமையாக நடிப்பார் என தெரிவித்தார்.

மேலும் சினிமா மீது மிகவும் ஆர்வம் கொண்ட இவர் ஒரு பிறவி நடிகை, ஆகவே இவர் மீண்டும் அவருடைய மகள்களுக்கு குழந்தையாக பிறந்து வந்து திரைத்துறையில் நடிப்பார் என தெரிவித்துள்ளார்.