1978 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து நடித்து வெளியான திரைப்படம் 'அவள் அப்படித்தான்'. நடிகை ஸ்ரீப்ரியா இந்த படத்தில் நாயகியாக நடித்திருந்தார். இயக்குனர் ருத்ரையா இயக்கத்தில் வெளியான இந்தப்படம் 42 வருடங்களுக்கு முன்பே மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த படத்தை மீண்டும் ரீமேக் செய்ய ஆர்வம் உள்ளதாக தெரிவிக்கிறார் இயக்குனர் பத்ரி வெங்கடேஷ். இவர் நடிகர் அதர்வா நடித்த 'பாணா காத்தாடி', 'செம்ம போத ஆகாதே' ஆகிய படங்களை இயக்கியவர்.

'அவள் அப்படிதான்' படத்தை மீண்டும் இயக்க முன் வந்துள்ளது குறித்து, அவர் கூறியுள்ளதாவது, இந்த படத்தின் கதை தற்போதைய சூழலுக்கு ஏற்ற கதை. மீடூ , காஸ்டிங் கவுச் போன்ற பிரச்சனைகளை 42  வருடங்களுக்கு முன்பே தோலுரித்த திரைப்படம். பெண்ணியம் தான் இந்த படத்தின் கரு. எனவே இந்த படத்தை மீண்டும் இயக்க ஆர்வமாக உள்ளதாக தெரிவிக்கிறார் பத்ரி.

மேலும் ரஜினிகாந்த் நடித்த வேடத்தில் சிம்புவும், கமல் நடித்த வேடத்தில் துல்கர் சல்மானும் நடித்தால் மிகவும் பொருத்தமாக இருப்பார்கள் என்றும், ஸ்ரீ பிரியா வேடத்தில்... ஸ்ருதிஹாசன் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என, நடிகர் நடிகைகளையே தேர்வு செய்து வைத்து கொண்டு இந்த படத்தின் உரிமை யாரிடம் உள்ளது என கோலிவுட் வட்டாரத்தையே ஜல்லடை போட்டு வருகிறார்.

இன்றைய சமுதாயத்துக்கு மிகவும் பொருந்துகிற இந்த கதையை மீண்டும் படமாக்குவதில் பெருமையாக கருதுவதாகவும் கூறுகிறார் இயக்குனர் பத்ரி வெண்டிங்கடேஷ்.