Asianet News TamilAsianet News Tamil

கொரோனா காலத்துல தேர்தல் அவசியமா..? அனுமதி மறுத்த காவல்துறை..!

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தேர்தலை வரும் 25/01/2022 அன்று நடத்துவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு, வேட்பாளர்கள் இறுதிப்பட்டியலும் வெளியிடப்பட்டு, தேர்தலை நடத்துவதற்கு உரிய அனுமதியைப் பெறுவதற்கு மாநகராட்சியிடமும், காவல்துறையினரிடமும் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் கோரியது. 
 

director association election cancel
Author
Chennai, First Published Jan 22, 2022, 6:56 AM IST

கொரோனா பரவல் காரணமாக திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலை நடத்த காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இதனையடுத்து, நிலைமை சீரடைந்த பிறகு தேர்தலுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில்நாதன் தெரிவித்துள்ளார். 

கொரோனா பரவல் காரணமாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அரசு அறிவித்ததால் ஜனவரி 23ம் தேதி நடப்பதாக இருந்த சங்க தேர்தல் ஜனவரி 25ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. தேர்தல் அன்று வாக்களிக்க வரும் அனைவரும் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். இல்லையேல் வாக்களிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். சமூக இடைவெளியை அனைவரும் பின்பற்ற வேண்டும். வாக்களிக்கும் இடத்தில் இடைவெளி கூடுதலாக இருக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலுக்கு மாநகராட்சியும், காவல்துறையும் அனுமதி மறுத்துள்ளது.

director association election cancel

இது தொடர்பாக தேர்தல் அதிகாரி  செந்தில்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தேர்தலை வரும் 25/01/2022 அன்று நடத்துவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு, வேட்பாளர்கள் இறுதிப்பட்டியலும் வெளியிடப்பட்டு, தேர்தலை நடத்துவதற்கு உரிய அனுமதியைப் பெறுவதற்கு மாநகராட்சியிடமும், காவல்துறையினரிடமும் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் கோரியது. 

director association election cancel

ஆனால், மாநகராட்சியும், காவல்துறையும் கொரோனா தொற்று சென்னையில் கடுமையாக இருப்பதை சுட்டிக் காட்டி அனுமதியை மறுத்துள்ளனர். எனவே, தேர்தல் நடத்தும் தேதி நிலைமைகள் சீரடைந்த பிறகு, தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் உரிய அனுமதி பெற்ற பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios