director ashok pandit help actress geetha kapoor
'பகீசா' என்கிற படம் மூலம் மிகவும் பிரபலமானவர் பழம்பெரும் நடிகை கீதா கபூர், இவருக்கு வயது 57 . இந்நிலையில் இவருடைய மகனே இவரை அடித்து கொடுமை செய்து மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

நாளைடைவில் இவருடைய மகன் திரும்பவும், மருத்துவமனைக்கு வந்து அவருடைய தாயை கடந்த இரண்டு மாதமாக அழைத்து செல்லவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த தகவலை அறிந்த தனியார் தொலைக்காட்சி ஒன்று இவருடைய பேட்டியை ஒளிபரப்பியது. தொடர்ந்து போலீசாரும் இவருடைய மகனை தேடும் வேளையில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது கீதா கபூரின் நிலையை அறிந்த பிரபல இயக்குனர் அசோக் பண்டிட் இவருடைய மருத்துவ செலவிற்கான அனைத்து தொகையையும் மருத்துவமனையில் செலுத்தி விட்டு, கீதா கபூரை முதியோர் இல்லத்தில் சேர்த்துள்ளார் இந்த விஷயத்தை அசோக் பண்டித் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
