பார்த்திபனின் ‘ஒத்தச்செருப்பு’படத்தை வானளாவப் புகழ்ந்து ஒரு வார இதழ் 51 மார்க்குகளையும் அள்ளி வழங்கியுள்ள நிலையில், அதை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு பரிதாப ஜீவன்,...நன்றியும்... வாழ்த்துக்களும்!!! கொஞ்சம் research செய்து எழுதினால் நல்லது...என்று பதிவிட்டிருக்கவே அதிர்ச்சியடைந்து விசாரித்தால் இக்கதை ‘கர்மா’என்ற இரட்டைப் பாத்திரங்கள் நடித்த கதையிலிருந்து திருடப்பட்டதாகத் தெரிகிறது.

இது குறித்து இயக்குநர் ஆர்.அரவிந்த் தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ள முந்தைய பதிவில்,...ஒத்த செருப்பு - கர்மா திரைப்பட அறிக்கை,...தற்போது வெளியாகியுள்ள திரு. இராதாகிருஷ்ணன் பார்த்திபன் அவர்களின் ஒத்த செருப்பு என்ற திரைப்படத்திற்கும் எனது தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் 2016ம் இணையதளத்தில் வெளிவந்த கர்மா திரைப்படத்திற்கும் இருக்கும் ஒற்றுமைகைளை திரை துறை நண்பர்கள் எனக்கு தொலைபேசி மூலம் அழைத்து சொல்லி வருகிறார்கள்.

 முதன் முதலாக ஒருவரே நடித்து, இயக்கி, தயாரித்த படம் என்று ஒத்த செருப்பு திரைப்படம் விளம்பரப்படுத்தப்படுவதை நான் அறிவேன். அனால் உண்மையாக அந்த பெருமை ’கர்மா’ திரைப்படத்தையே சாரும். இதை பெரிதுபடுத்தி விளம்பரம் தேடும் எண்ணம் எனக்கு இல்லை. திரு. இராதாகிருஷ்ணன் பார்த்திபன் அவர்கள் மிக சிறந்த கலைஞர். மிகுந்த சிரமத்திற்கு இடையில் ஒத்த செருப்பு படத்தை திரையரங்கில் ஓட வைக்க முயற்சி செய்து வருகிறார். அவர் வெற்றியடைய வேண்டும் என்பதே என் எண்ணம். இந்த அறிக்கை ஒரு விளக்க பதிவு மட்டுமே.என்றும் உண்மைக்கு துணை நிற்கும் மீடியா நண்பர்களுக்கு நன்றி.
அன்புடன்
ஆர். அர்விந்த்
இயக்குனர்....என்று பதிவிட்டிருக்கிறார். அர்விந்தின் இப்பதிவுக்கு பார்த்திபன் இன்னும் மூச் விடவில்லை.