அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2018ல் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் "இமைக்கா நொடிகள்". விஜய் சேதுபதி, நயன்தாரா, அதர்வா, ராஷி கண்ணா ஆகியோர் நடித்திருந்த இந்த படத்தின் மூலம் வில்லனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அனுராக் காஷ்யப். இந்தி திரையுலகில் முன்னணி இயக்குநரான இவரது நடிப்பு ஒரு படத்திலேயே தமிழ் ரசிகர்களை கவர்ந்தது. 1993-ம் ஆண்டு நடந்த மும்பை குண்டு வெடிப்புகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இவரது பிளாக் ஃபிரைடே என்கிற திரைப்படம் பல தேசிய விருதுகளை வென்றதுடன் பல சர்ச்சைகளையும் உண்டாக்கியது.

இதையும் படிங்க: “இந்த இரண்டை மட்டும் செய்தால் போதும்”... குஷ்புவின் ஸ்லிம் லுக் ரகசியம்...!

சமீபத்தில் அனுராக் காஷ்யப்பிற்கும் அவருடைய ப்ளாக் ஃப்ரைடே படத்தின் கேமராமேனான நட்ராஜுக்கும் இடையே ட்விட்டரில் மோதல் வெடித்தது. நட்ராஜும் இயக்குநர் அனுராக் காஷ்யப்பும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் ஒன்றாகத் திரையுலகில் அறிமுகமானார்கள். இந்நிலையில் ட்விட்டரில், “அனுராக் என்னை மறந்துவிட்டு அர்த்தமில்லாமல் பேசுகிறார். அவரோடு பணியாற்றியவர்களைக் கேளுங்கள். அவர் ஒரு முட்டாளன்றி வேறு ஒன்றுமில்லை. முட்டாள்கள் முட்டாள்களாகவே இருப்பார்கள்.நான் ஒரு சுயநலவாதியைப் பற்றிப் பேசினேன். அது அனுராக் காஷ்யப் தான்" என்று குறிப்பிட்டு இருந்தார் நட்ராஜ்.

இதையும் படிங்க:  “டாப் ஆங்கிளில் எல்லாமே தெரியுது”... கவர்ச்சி போஸ் கொடுத்த பிக்பாஸ் பிரபலத்தை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்...!

இதையடுத்து நட்ராஜுக்கும் தனக்குமான நட்பு குறித்து விளக்கம் அளித்தார் அனுராக் காஷ்யப், நடராஜ் தான் என்னை தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்தார். நடராஜ் தான் என்னை பாலாவுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவர்தான் என்னை ரஜினி சாரை சந்திக்க வைத்தார். அவர்தான் முதன்முதலில் நான் பார்த்த தமிழ் படமான செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த படத்தை என்னைப் பார்க்க வைத்தார். அதுவும் சப்டைட்டில் இல்லாமல். அதன் பிறகுதான் நான் மற்ற தமிழ்ப்படங்களைப் பார்க்க தொடங்கினேன என்றெல்லாம் கூறியிருந்த அனுராக், என்னை மன்னித்துவிடுங்கள் நட்டி என வெளிப்படையாக மன்னிப்புக்கோரினார். 

இதையும் படிங்க: கேரளா ஸ்டைல் வேட்டி, சட்டையில் அமலா பால்... கெத்து போஸைப் பார்த்து திக்குமுக்காடும் ரசிகர்கள்...!

இந்நிலையில் டிக்-டாக்கில் இணைந்துள்ள அனுராக் காஷ்யப், தனது மகள் ஆலியா காஷ்யப்புடன் சேர்ந்து போட்டுள்ள ஆட்டம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விதவிதமான உடையில் மகளுடன் சேர்ந்து அனுராக் போட்டுள்ள டான்ஸ் ஸ்டெப் ரசிகர்களை கவர்ந்துள்ளது. மகள் அளவுக்கு ஆட்டம் போட முடியாமல் அனுராக் திணறுவதும், தப்பு தப்பாக ஸ்டெப்பை போடுவதும் கூட காண்போரை ரசிக்க வைக்கிறது.