Nanban Oruvan Vantha Piragu : இந்த 2023 ஆம் ஆண்டு தமிழ் சினிமா பல திறமையான புது முக இயக்குனர்களை கண்டுள்ளது என்று கூறினால் அது மிகையல்ல. அந்த வகையில் ஹிப் ஹாப் தமிழா ஆதியின் "மீசைய முறுக்கு" திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான ஆனந்த் தற்பொழுது இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபல இசையமைப்பாளரும், இயக்குனருமான ஹிப் ஹாப் தமிழா ஆதியின் இசை மற்றும் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் "மீசைய முறுக்கு" இந்த திரைப்படத்தை நடிகை குஷ்பு அவர்களின் "அவ்னி மூவிஸ்" தயாரித்து வழங்கியது அனைவரும் அறிந்ததே. இந்த திரைப்படத்தில் ஹிப் ஹாப் தமிழா ஆதியின் தம்பியாக நடித்திருந்தவர் தான் நடிகர் ஆனந்த்.
திரைத்துறையில் இயக்குனர் கனவோடு பயணித்து வரும் பலரில் இவரும் ஒருவர். இந்நிலையில் "மீசைய முறுக்கு" திரைப்படத்தை தொடர்ந்து ஓரிரு படங்களில் நடித்த ஆனந்த், தற்பொழுது "நண்பன் ஒருவன் வந்த பிறகு" என்கின்ற தலைப்பில் ஒரு புதிய திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் வெங்கட் பிரபு, இளங்கோ குமரவேல், பவானி ஸ்ரீ மாற்று KPY பாலா உள்ளிட்ட பலர் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மிக்ஜாம் புயல் பாதிப்பு: அமைச்சர் உதயநிதியிடம் 10 லட்சம் நிவாரண நிதியை வழங்கிய சிவகார்த்திகேயன்..
ஏற்கனவே இந்த படத்தில் இருந்து முதல் சிங்கிள் பாடல் வெளியான நிலையில், விரைவில் இந்த படத்தில் இருந்து இரண்டாவது சிங்கள் பாடலும் வெளியாக உள்ளது. ஆளாதே என்கின்ற அந்த பாடல் விரைவில் வெளியாக உள்ளது, இந்நிலையில் அந்த பாடல் பிரபல நடிகர் தனுஷ் குரலில் ஒலிக்க உள்ளது தான் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இது குறித்து ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டுள்ள இயக்குனர் ஆனந்த், தனது வாழ்க்கையில் கனவு, நம்பிக்கை, விடாமுயற்சி, காத்திருப்பு, ஆசீர்வாதம் மற்றும் மேஜிக் என்று இவை அனைத்தும் ஒரே புகைப்படத்தில் தற்பொழுது எடுக்கப்பட்டுள்ளது என்று கூறி அவரும் நடிகர் தனுஷ் அவர்களும் இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
மேலும் தனது திரைப்படத்தில் வரும் செகண்ட் சிங்கிள் பாடலை பாடியதற்காக அவருக்கு தனது நன்றிகளை தெரிவித்துள்ளார் ஆனந்த். விரைவில் இந்த பாடல் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது, நடிகர் ஆனந்த் இயக்குனராக மாறியுள்ள அதே நேரம் அவர் நடிகர் தனுஷ் அவர்களுடைய தீவிரமான ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.
