Asianet News TamilAsianet News Tamil

“அந்த நபர் நல்ல தாய்க்கு மகனாக பிறந்திருக்க வாய்ப்பில்லை”... விஜய்சேதுபதி மகள் விவகாரத்தில் அமீர் காட்டம்...!

அது ஒரு நல்ல சமூகத்தின் அடையாளம் கிடையாது. மேலும் அப்படிச் செய்பவர்கள் நல்ல தமிழ் தாய்க்கு பிள்ளையாகப் பிறந்திருக்க வாய்ப்பில்லை என்றே நான் கருதுகிறேன். 

Director ameer Slams man who gave rape threats to vijay sethupathi daughter
Author
Chennai, First Published Oct 21, 2020, 1:19 PM IST

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று கதையான 800 படத்திலிருந்து விஜய் சேதுபதி விலக வேண்டுமென தமிழகம் முழுவதும் கண்டனங்கள் குவிந்தன. இதையடுத்து நடிகர் விஜய் சேதுபதியும் அந்த படத்திலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதற்கு முன்னதாக அந்த படத்திலிருந்து விலக வலியுறுத்தி, மர்ம ஆசாமி ஒருவர் விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்தது சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இந்த போக்கை கடுமையாக கண்டித்து இயக்குநர் அமீர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

Director ameer Slams man who gave rape threats to vijay sethupathi daughter


இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இந்த நாட்டில் ஒவ்வொரு தனி மனிதனும் தன்னுடைய கருத்தை பொது வெளியில் பகிர்ந்து கொள்ளக் கூடிய உரிமையை அரசியல் சாசனம் நம் அனைவருக்கும் வழங்கி உள்ளது. அது போல் ஒவ்வொருவரும் தாம் விரும்பிய ( சட்டம் அனுமதித்த ) தொழிலை செய்வதற்கும் மக்கள் அனைவருக்கும் உரிமை உள்ளது. அந்த வகையில் தன் தொழிலான நடிப்பின் மூலம் முத்தையா முரளிதரன் எனும் கிரிக்கெட் வீரரின் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க நடிகர் விஜய் சேதுபதி ஒப்புக்கொண்டார். 

Director ameer Slams man who gave rape threats to vijay sethupathi daughter

முத்தையா முரளிதரன் என்பவரின் வாழ்க்கை வரலாற்றுப் பிண்ணனியில் இன்னும் முடிவு பெறாத, நீதி கிடைக்கப் பெறாத ஈழ அரசியல் இருக்கின்ற காரணத்தாலும் லட்சக்கணக்கான தமிழ் மக்களின் இனப்படுகொலை வரலாறு இருப்பதாலும் அந்தக் கதாபாத்திரத்தை தவிர்த்து விடுங்கள் என்று நடிகர் விஜய் சேதுபதியின் மீது அன்பு கொண்டவர்களும் ஈழ அரசியலின் மீது ஆர்வம் கொண்டவர்களும் பெரும்பான்மை தமிழ்ச் சமூகமும் உலகெங்கும் வாழும் ஈழச் சொந்தங்களும் நடிகர் விஜய் சேதுபதியிடம் கோரிக்கை வைத்தனர். சிலர் கடும் சொற்களால் எதிர்ப்பும் தெரிவித்தனர். அந்தக் கோரிக்கை மற்றும் எதிர்ப்பின் பலனாக முத்தையா முரளிதரன் அவர்களே தனது படத்திலிருந்து விலகிக்கொள்ளுங்கள் என்று நடிகர் விஜய் சேதுபதியை கேட்டுக் கொண்டதன் பேரில் 800 எனும் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்திலிருந்து நடிகர் விஜயசேதுபதி விலகிக்கொண்டார் என்பது நாம் அறிந்ததே.

Director ameer Slams man who gave rape threats to vijay sethupathi daughter

 

இதையும் படிங்க: பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவா இது? மார்டன் உடையில் என்னம்மா போஸ் கொடுத்து அசத்தியிருக்காங்க...!

இந்நிலையில் அவர் மீது கொண்ட கோபத்தின் காரணமாகவும் அவரை இழிவுபடுத்தும் நோக்கத்தோடும் அவரின் மகளை தவறாகப் பேசியும் மிரட்டும் பாணியிலும் சிலர் பொது வெளியில் கருத்துக்களை பதிவிட்டிருப்பது அநாகரீகத்தின் உச்சம் என்றும் அநீதியான செயல் என்றும் நான் வண்மையாகக் கண்டிக்கிறேன். பொது வெளியில் பயணிக்கிற ஒவ்வொரு மனிதனின் செயலுக்காக அவரது குடும்பத்தினரை அவமானப்படுத்துவதும் பொது வெளியில் நச்சுக் கருத்துக்களை பதிவிடுவதும் நல்லதல்ல.

Director ameer Slams man who gave rape threats to vijay sethupathi daughter

 

இதையும் படிங்க: “பீட்டர் பாலை அன்னைக்கே செருப்பால அடிச்சு விரட்டியிருப்பேன்”... கொந்தளித்த வனிதா...!

அது ஒரு நல்ல சமூகத்தின் அடையாளம் கிடையாது. மேலும் அப்படிச் செய்பவர்கள் நல்ல தமிழ் தாய்க்கு பிள்ளையாகப் பிறந்திருக்க வாய்ப்பில்லை என்றே நான் கருதுகிறேன். இது போன்ற நிகழ்வுகள் இன்னொரு முறை நம் மண்ணில் நடைபெறாத வண்ணம் தடுக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையுமாகும். அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட கயவர்களை கண்டறிந்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டியதும் நமது அரசாங்கம் மற்றும் காவல் துறையின் தலையாய கடமையுமாகும் என வேண்டுகிறேன்.

Follow Us:
Download App:
  • android
  • ios