director ameer respect the ajith words
இயக்குனர் அமீர் சமீபத்தில் கலந்துக்கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் அவரிடம் நடிகர் அஜித் குறித்து முக்கிய கேள்வி ஒன்றை செய்தியாளர்கள் எழுப்பி உள்ளனர். இதற்கு அமீர் அஜித்தின் குணம் குறித்து அனைவருக்கும் தெரிந்தது தான் ஒருவேளை அவர் அப்படி கூறி இருந்தால் அஜித்துக்கு தலைவணங்குவதாக கூறியுள்ளார்.

செய்தியாளர்கள் கேட்ட கேள்வி:
இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட இயக்குனர் அமீர் நிகழ்ச்சியை முடித்து விட்டு வெளியில் வந்தபோது... சமீபத்தில் மலேசியாவில் நடத்தப்பட்ட கலை நிகழ்சிக்கு நடிகர் சங்க நிர்வாகிகள் அஜித்துக்கு அழைப்பு விடுத்த போது, அவர்களின் அழைப்பை ஏற்க மறுத்த அஜித். ஏன் கலை நிகழ்ச்சிகள் நடத்தி மக்களிடம் பணம் வசூல் செய்ய வேண்டும் நாமே பணம் போட்டு கட்டிடம் கட்டலாம் என கூறியதாக வெளிவந்த தகவல் பற்றி கருத்து கேட்க்கப்பட்டது.
அமீரின் பதில்:
அஜித் இப்படி கூறியதாக நானும் நாளிதழ்களில் தான் படித்தேன், ஒரு வேலை அது உண்மை என்றால் அவருக்கு நான் தலைவணங்குகிறேன் என கூறினார்.

ரசிகர்கள் கொண்டாட்டம்:
பல வெற்றி படங்களை கொடுத்து பிரபல இயக்குனராக இருக்கும் அமீர், இப்படி கூறி இருப்பது அஜித் ரசிகர்களை குஷியாக்கி உள்ளது. இந்த செய்தியை அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
