Ameer's Maayavalai : பிரபல இயக்குனர் அமீர் இயக்கத்தில் அவருடைய ஐந்தாவது திரைப்படமாக மாயவலை என்கின்ற திரைப்படம் தற்பொழுது உருவாகி உள்ளது. இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
கடந்த 2002 ஆம் ஆண்டு தமிழில் வெளியான நடிகர் சூர்யா அவர்களின் "மௌனம் பேசியதே" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் திரை உலகில் களம் இறங்கியவர் தான் பிரபல இயக்குனர் அமீர் சுல்தான். அதனை தொடர்ந்து இவர் இயக்கத்தில் வெளியான ராம், பருத்திவீரன் மற்றும் ஆதி பகவன் போன்ற படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
குறிப்பாக ஜீவாவின் ராம் மற்றும் கார்த்தியின் பருத்திவீரன் ஆகிய இரு திரைப்படங்களும், அமீரின் திரை வாழ்க்கையில் மட்டுமல்லாமல் ஜீவா மற்றும் கார்த்தியின் திரை வாழ்க்கையிலும் மிக மிக முக்கியமான திரைப்படங்களாக மாறியது. ஆனால் ஆதி பகவன் படத்திற்கு பிறகு பெரிய அளவில் இயக்குனர் பணிகளில் கவனம் செலுத்தாமல் இருந்தார் அமீர்.
அந்த சூழலில் தான் வெற்றிமாறனின் வட சென்னை திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார். ஒரு நடிகராகவும் அந்த படத்தின் மூலம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றார் அமீர், அதன் பிறகு நாற்காலி மற்றும் மாறன் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த இயக்குனர் அமீர், தற்பொழுது தனது அடுத்த படைப்பினை மக்கள் முன் வெளியிட உள்ளார்.
செம ரொமாண்டிக்கா கிறிஸ்துமஸ் கொண்டாடிய அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன்.. க்யூட் போட்டோஸ்..
மாயவலை என்கின்ற இந்த திரைப்படம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. மேலும் இந்த மாயவலை திரைப்படத்திற்கான கதையை எழுதியது பிரபல இயக்குனர் வெற்றிமாறன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தை அமீர் இயக்க, ஐந்தாவது முறையாக யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்நிலையில் இந்த படத்திலிருந்து "வாழ்க்கை ஒரு மாயவலை" என்ற முதல் சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது. அந்த பாடலை பிரபல நடிகர் சிலம்பரசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இயக்குனர் அமீர், கதாசிரியர் வெற்றிமாறன் மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஆகியோருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
