பிக்பாஸ் நிகழ்ச்சி விரைவில் 100 நாட்களை எட்ட உள்ள நிலையில், தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள், முதல் சீசன் போட்டியாளர்கள் ஆர்த்தி, சிநேகன், காயத்திரி, சுஜா வருணி, மற்றும் ஆரவ் ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்கு கெஸ்டாக சென்றுள்ளனர்.

இவர்கள் அங்கு ஒரு வார காலம் தங்க உள்ளனர். இவர்கள் வீட்டிற்குள் வந்த முதல் நாளே... எல்லாருமே சமம் தான் யாருக்கும் சிறப்பு சலுகை கிடையாது என கூறி, மும்தாஜுக்கு வைக்கப்பட்ட ஸ்பெஷல் பால், தயிர், போன்ற பொருட்களை அப்புறப்படுத்தினர். 

இதைதொடர்ந்து தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் வந்திருக்கும் ஆரவ், பிக்பாஸ்சிடம் இருந்து வந்த ஒரு கடிதத்தை படிக்கிறார். அந்த கடிதத்தில்... டிக்கெட் டூ ஃபைனல் என்று ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அனைத்து போட்டியாளர்களுக்கும் கையில் தண்ணீர் நிரப்பப்பட்ட ஒரு பவுல் கொடுக்கப்படும். அந்த பவுலை கையில் வைத்து கொண்டு போட்டியாளர்கள் அனைவரும் ஒரு சிறு வலயத்தை சுற்றி நடந்து வர வேண்டும் என்பது விதி.

இதில் இறுதியில் யாருடைய பவுலில் தண்ணீர் அதிகமாக குறையாமல் இருக்கிறதோ, அவர் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஃபைனலுக்கு நேரடியாக செல்வார் என்று கூறப்பட்டுள்ளது. இந்த டாஸ்க் முடிந்ததும், யார் வெற்றியாளர் என்பதை சுஜா வருணி மற்றும் ஆரவ் இருவரும் தண்ணீரின் அளவை ஒப்பிட்டு பார்த்து கண்டுபிடிக்கும் காட்சிகளும் பிரோமோவும் வெளியாகியுள்ளது.