'மிஷன் மங்கள்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தமிழகத்தை சேர்ந்த ஜெகன் சக்தி. இந்த படத்தில் அக்ஷய் குமார்,  வித்யா பாலன், சோனாக்ஷி சின்ஹா, டாப்ஸி பன்னு மற்றும் நித்யா மேனன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இப்படம் வெளியாகி, உலகளவில் 300 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது. இந்த படத்தை தொடர்ந்து, மிகப்பெரிய பேனரில்... பிரமாண்ட பட்ஜெட்டில், ஒரு படத்தை இயக்க தயாராகி வந்தார் ஜெகன் சக்தி.

இந்நிலையில், இவர் நண்பர்களிடம் சகஜமாக பேசிக்கொண்டிருக்கும் போது, யாரும் எதிர்பாராத விதமாக, திடீர் என கீழே சரிந்து விழுந்தார். உடனடியாக அவருடைய நண்பர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

ஜெயன் சக்தியை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மூலையில் ரத்தம் உறைந்துள்ளதாகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த செய்து அவருடைய குடும்பத்தாரையும், ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஜெகன் சக்தி ஆர்.பால்கி இயக்கிய 'ஷமிதாப்' மற்றும் 'பா' ஆகிய படங்களில் அவருடன் துணை இயக்குனராக பணியாற்றியுள்ளார். அதே போல் ஏ.ஆர்.முருகதாஸ் ஹிந்தியில் இயக்கிய  'கஜினி', 'ஹாலிடேய்ஸ்' மற்றும் 'அகிரா' படங்களில் துணை இயக்குனராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.