டில்லி கண்டிப்பா திரும்ப வருவான்... கைதி 2வை உறுதி செய்த கார்த்தி...!

"மாநகரம்" என்ற வித்தியாசமான படம் மூலம் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையே தன்பக்கம் திரும்பி பார்க்க வைத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ். அதன் பின்னர் அவர் இயக்கிய "கைதி" திரைப்படம், தீபாவளி ட்ரீட்டாக திரைக்கு வந்தது. தீபாவளி ரேஸில் விஜய்யின் பிகிலுடன் மோதிய கார்த்தியின் கைதி, வசூலில் அசுர வேட்டை நடத்தி வருகிறது. ஒரே இரவில் நடக்கும் கதையை மையமாக கொண்ட "கைதி" திரைப்படத்தில் கார்த்தி வெற லெவல் நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். கார்த்தியின் மாஸ் நடிப்பால் கவரப்பட்ட ரசிகர்கள் "கைதி 2" எப்போ திரைக்கும் வரும் என லோகேஷ் கனகராஜை நச்சரிக்க ஆரம்பித்தனர். இதற்கு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிலளித்த லோகேஷ் கனகராஜ், டில்லியை மீண்டும் திரையில் பார்ப்பீங்கன்னு ரசிகர்களுக்கு சூசகமான அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

இதனையடுத்து விஜய்யின் "தளபதி 64" படத்தை இயக்கும் வாய்ப்பு லோகேஷ் கனகராஜுக்கு கிடைத்தது. தற்போது அந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து, 2வது கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வருகிறது. சம்மர் விருந்தா வெளியாக உள்ள "தளபதி 64" படத்தை விரைவில முடிச்சிட்டு, லோகேஷ் "கைதி 2" பட வேலைகளை ஆரம்பிப்பாருன்னு ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்காங்க. இந்த நிலையில், "தளபதி 64" படத்தை முடிச்ச கையோட லோகேஷ் கனகராஜ், சூர்யாவுக்கு படம் பண்ணப் போறதா தகவல்கள் வெளியாகின. அப்போ "கைதி 2" அவ்வளவு தானா?, நாங்க டில்லியை மறுபடியும் பார்க்கவே முடியாதான்னு கார்த்தி ரசிகர்கள் ரொம்ப ஃபீல் பண்ணாங்க.


இந்த சமயத்தில ரசிகர்களின் வயித்துல பால் வார்த்திருக்கார் கார்த்தி. தன்னோட கைதி திரைப்படத்தை மிகப்பெரிய வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கு  தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவிச்சிருக்காரு கார்த்தி. நன்றி மட்டும் போதுமா, நாங்க கேட்டது என்னாச்சுன்னு ரசிகர்கள் கேள்வி எழுப்புறதுக்கு முன்னாடியே, "டில்லியை கண்டிப்பா மறுபடியும் பார்ப்பீங்கன்னு"  உறுதி அளிச்சிருக்காரு. இந்த இன்ப அதிர்ச்சியால திக்கு முக்காடிப் போன கார்த்தி ரசிகர்கள் "கைதி 2"-வை எதிர்பார்த்து காத்துக்கிட்டு இருக்காங்க.