பிக்பாஸ் பைனல் நிகழ்ச்சியில், கைதறி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் விதமாக, இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளரும், நடிகரும், அரசியல் தலைவருமான கமல்ஹாசன் ஹவுஸ் ஆப் கதர் என்ற ஒரு பிராண்டை அறிமுகப்படுத்தினார். 

இதன் மூலம், தற்போதைய இளைஞர்கள், பெண்கள், என அனைவரும் விரும்பும்  விதத்தில், நவ நாகரீக ஆடைகளை, கதர் துணியில் தயார் செய்து, நம் நாட்டின் கை தறி தொழிலை உயரும் பாதையில் கொண்டு செல்ல உள்ளதாக தெரிவித்தார். இவரது அறிவிப்புக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

மேலும் பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவருக்கும், கமல் கதர் ஆடைகளை கொடுத்தார். அதனை பெற்று கொண்ட போட்டியாளர்களும் கதர் ஆடையில் அன்றைய தினம் பிக்பாஸ் நிகழ்ச்சியை அலங்கரித்தனர்.

இந்நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களின் ஒருவரான சுசித்ரா கமலின், கதர் ஆடை குறித்து சமூக வலைதள பக்கத்தில், மோசமாக விமர்சனம் செய்ததாக கூறப்படுகிறது. கமல்ஹாசன் கொடுத்த துணி கதர் இல்லை என்றும் அதுவொரு சிந்தடிக் துணி என்றும் கூறி கமல்ஹாசனின் பிராண்டுக்கே ஆப்பு வைக்கும் விதத்தில் பதிவிட்டிருந்தார்.

இதுகுறித்து ரசிகை ஒருவர் ‘சுசித்ரா அணிந்தது கதர் ஆடை தான் அணிந்திருந்தார் என்றும், பொய் சொல்கிறார் என அந்த தெரிவித்து சுசிக்கு பதிலடி கொடுத்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.