தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விஜய் தேவாரகொண்டாவிற்காக, மற்றொரு முன்னணி நடிகர் பாடல் பாடி உள்ளது பலரையும் வியக்க வைத்துள்ளது.

தமிழில் நோட்டா படத்தின் மூலம் அறிமுகமானவர், தெலுங்கு நடிகர் விஜய் தேவரக்கொண்டா.  இவர் நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான 'அர்ஜுன் ரெட்டி' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இதைத்தொடர்ந்து இந்த படத்தை தமிழ், இந்தி, உள்ளிட்ட மொழிகளில் ரீமேக்  செய்துள்ளனர்.  இந்நிலையில் இவர் புதிதாக நடித்துள்ள திரைப்படம் 'காம்ரேட்'.  ஜூலை 26ஆம் தேதி ரிலீசாக உள்ள இந்த படத்திற்காக ஒரு புதிய பாடலை பிரபல நடிகர் துல்கர் சல்மான் பாடியுள்ளார்.  இந்த படத்திற்க்கு ஜஸ்டீன் பிரபாகரன் இசை அமைத்துள்ளார்.  மேலும் இந்த பாடல் மிகவும் அருமையாக வந்து இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே விஜய் மற்றும் துல்கர் சல்மான் இருவரும் இணைந்து மகாநடி படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.