dhulkar salman solo movie re relese
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்றும் குறைந்தது நான்கு திரைப்படங்களாவது திரைக்கு வந்து கொண்டுதான் இருக்கிறது. அதில் ஒரு சில படங்களே மக்களின் ஆதரவைப் பெற்று வெற்றி வாகை சூடும்.
இந்நிலையில் வாயை மூடிப் பேசவும் படத்தில் அறிமுகம் கொடுத்த நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்து பெஜாய் நம்பியார் இயக்கத்தில் அக்டோபர் 5 ஆம் தேதி ரிலீசான படம் 'சோலோ'.
சில தவிர்க்க முடியாத காரணங்களால் அடுத்த நாளிலிருந்தே திரையிட முடியாத நிலை ஏற்பட்டது. அந்த ஒரு நாளில் 'சோலோ' படத்தைப் பார்த்த சினிமா ரசிகர்களும் விமர்சகர்களும் படத்தின் எல்லா அம்சங்களையும் ரசித்து மகிழ்ந்தனர். இந்தச் செய்தி மக்களிடையே பரவி இப்படத்தைக் காணும் ஆர்வம் அதிகரித்தது.
தற்போது மீண்டும் இன்று முதல் 'சோலோ' படம் தமிழ்நாடு முழுவதும் 80-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்தச் செய்தி தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தைக் காண காத்திருக்கும் பெரும் கூட்டத்திற்கு இது ஒரு சரியான வாய்ப்பாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
