தெலுங்கில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக் ஆதித்யா வர்மா. சீயான் விக்ரமின் மகனான துருவ் விக்ரமிற்கு அறிமுக படமான அது, நல்ல ஓப்பனிங்காக அமைந்துள்ளது. சீயான் விக்ரமிற்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது போலவே முதல் படத்திலேயே இளம் ரசிகர்களை தன் பக்கம் இழுத்துவிட்டார் துருவ்.

என்னதான் சாயல், குரல் என எல்லாம் அப்பா போலவே இருந்தாலும், சீயான் ரசிகர்களுக்கு பிடித்தது என்னவோ விக்ரமை தான். இந்நிலையில் தற்போது சீயான் விக்ரம் நடிப்பில் வெளியான படம் ஸ்கெட்ச். அந்த படத்தில் செம்ம ஸ்டைலிஷ் அண்ட் லோக்கல் லுக்கில் கலக்கியிருப்பார் சீயான் விக்ரம். 

அப்படிப்பட்ட ஸ்கெட்ச் படத்தின் போஸ்டரை தனது ஆட்டோவில் ஓட்டியிருந்த ஆட்டோ டிரைவர் ஒருவர், அதை துருவ் விக்ரமிடம் காட்டியுள்ளார். அதனை பார்த்து அசந்து போன துருவ், அவருடன் செல்ஃபி எடுத்து சர்ப்பிரைஸ் கொடுத்துள்ளார். 

துருவ்வின் இந்த செயலால் வியந்து போன விக்ரம் ரசிகர்கள் துருவ் நீ வேற லெவல்யா என புகழ்வதோடு, அந்த புகைப்படங்களையும் சோசியல் மீடியாவில் வைரலாக்கி வருகின்றனர்.